/tamil-ie/media/media_files/uploads/2019/03/tata-sky.jpg)
Tata Sky announces discounts
Tata Sky announces discounts : டாட்டா ஸ்கை பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது அந்நிறுவனம். ஒன்றிற்கும் மேற்பட்ட டிவி கனெக்சென்களை பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மல்டிபிள் கனெக்சன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் ப்ரைமரி கனெக்சனுக்கு மட்டுமே நெட்வொர்க் கெப்பாசிட்டி, டாட்டா ஸ்கை சர்வீஸ் கட்டணம் மற்றும் பிங்க் சர்வீஸ் கட்டணம் இல்லை.
Tata Sky announces discounts for multiple TV connection subscribers
ஒரு வாடிக்கையாளர்களின் பிரைமரி கனெக்சனின் விலை ரூ. 100 என்றால், இரண்டாவது கனெக்சனுக்கு ரூ. 150 வாங்கப்படும். பிரைமரி கனெக்சனின் விலை 101ல் இருந்து 200 வரை இருந்தால் அவர்களின் இரண்டாவது கனெக்சனுக்கான கட்டணம் ரூ.200மாக வசூலிக்கப்படும்.
750 ரூபாய்களுக்கு மேலான மாதந்திர கட்டணம் கொடுப்பவர்கள் ரூ.700ஐ இரண்டாவது கனெசனுக்கு கட்டணமாக செலுத்த வெண்டும்.
அதே போல் சில சிறப்பு சலுகைகளையும் டாட்டா ஸ்கை இந்த வகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி ரூ.295 மற்றும் ரூ.334க்கான ஹிந்தி லைட் மற்றும் ஹிந்தி பேசிக் பேக் இரண்டையும் இரண்டாம் கனெசனாக பெரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.150 க்கு வழங்குகிறது டாட்டா ஸ்கை.
அதே போல் ரூ.365க்கு வழங்கப்படும் ஃபேமிலி கிட்ஸ் பேக்கை நீங்கள் இரண்டாம் கனெக்சனில் ரூ.200க்கு வாங்கலாம். ஃபேமிலி ஸ்போர்ட்ஸ் (ரூ.456) மற்றும் ஃபேமிலி கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் (ரூ.464) என இந்த இரண்டு பேக்கையும் ரூ.300க்கு வாங்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.