Tata Sky Binge offers free Zee5 subscription : டாட்டா ஸ்கையின் பின்ஜ் சேவை தற்போது டிஜிட்டல் கண்டெண்ட்டுகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஏற்கனவே ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ், ஹங்காமா ப்ளே, எரோஸ் நவ் போன்ற சேவைகளை வழங்கி வந்த டாட்டா ஸ்கை நிறுவனம் தற்போது கூடுதல் விலை ஏதும் இல்லாமல் ஜீ5 சேவைகளை வழங்கி வருகிறது. டாட்டா ஸ்கை வீடியோ - ஆன் - டிமாண்ட் கலெக்ஸனில் தற்போது வாடிக்கையாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.
ஜீ5 ப்ளாட்ஃபார்ம் 1 லட்சம் மணி நேரங்களுக்கு இணையான டிஜிட்டல் வீடியோ சேவைகளை 12 மொழிகளில் வழங்கி வருகிறது. 500 டிவி ஷோக்கம், 3500 படங்கள், வெப் சீரிஸ்கள், 4000க்கும் மேற்பட்ட மியூசிக் வீடியோக்கள் என அனைத்தையும் வழங்கி வருகிறது ஜீ5 சேவை. மேலும் வாடிக்கையாளர்கள் 90க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், எரோஸ் நவ், ஹங்காமா போன்ற ஓ.ஓ.டி. ப்ளாட்ஃபார்ம்களுடன் மே மாதம் இந்த சேவை அறிமுகமானது. பின்ஜ் சேவையை அமேசானின் ஃபையர் டிவி ஸ்டிக் மூலமக பெற்றுக் கொள்ளலாம். அமேசான் ப்ரைம் வீடியோ முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே இலவசம். டாட்டா ஸ்கை பின்ஜ்ஜின் இதர சேவைகளை நீங்கள் இலவசமாக பெற்றிடலாம். அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக்குடன் கூடிய டாட்டா ஸ்கை பின்ஜ் விலை ரூ. 3,999 ஆகும். அமேசானும் 30 நாட்களுக்கான இலவச பின்ஜ் சேவைகளை வழங்குகிறது. அதன் பின்னர் மாதம் ரூ. 249 -ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.