டாட்டா ஸ்கை, டிஷ் டிவி, d2h: ரீசார்ஜ் கவலையை விடுங்க… உடனடி கடன் வசதி அறிவிப்பு

D2h உடனடி கடன் வசதியை தேர்ந்தெடுக்கும் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணத்தை பின்னர் செலுத்த வேண்டிவரும். சேவைக் கட்டணம் ரூபாய் 10/-

By: May 3, 2020, 9:56:01 PM

Tata Sky, Dish TV and d2h DTH operators: இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் உள்ள மூன்று பிரபல டிடிஎச் (DTH) ஆப்ரேட்டர்கள் உடனடி கடன் வசதியை தங்களது சந்தாதாரர்களுக்கு வழங்குகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் அல்லது வேறு காரணங்களுக்காக தங்களது டிடிஎச் செட்டாப் பாக்ஸ்களை (set-top-boxes) ரீசார்ஜ் செய்யமுடியாத சந்தாதாரர்களுக்கு டாட்டா ஸ்கை (Tata Sky), டிஷ் டிவி இந்தியா லிமிட்டெட் (Dish TV India limited), d2h ( இதுவும் டிஷ் டிவி இந்தியா லிமிட்டெடுக்கு சொந்தமானது) ஆகியவை பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.


டிஷ் டிவி : கட்டணத்தை பிறகு செலுத்தும் சேவையை (Pay Later Service) ’டிஷ் டிவி அனைத்து பயனர்களுக்கும் எப்போதும் வழங்கி வருகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக சந்தாதாரர்கள் தொடர்ச்சியான சேவையை எந்தவித இடையூறும் இல்லாமல் அனுபவிப்பதை டிடிஎச் ஆப்ரேட்டர் உறுதி செய்கிறார். எனவே உடனடி கடன் (instant credit/loan) தேவைப்படும் சந்தாதாரர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து 1800-274-9050 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து தங்களது கணக்கில் உடனடி கடனைப் பெறலாம்.

அங்க, இங்கன்னு ஏன் போறீங்க? எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ் போல வருமா?

d2h: மற்றொரு டிடிஎச் நிறுவனமான d2h ம் உடனடி கடன் வசதியை தனது சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது ஆனால் ஒரு பிடிப்புடன். உடனடி கடன் வசதியில் d2h ஒரு சேவைக் கட்டணத்தை உள்ளடக்கியுள்ளது. எனவே D2h உடனடி கடன் வசதியை தேர்ந்தெடுக்கும் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணத்தை பின்னர் செலுத்த வேண்டிவரும். சேவைக் கட்டணம் ரூபாய் 10/-.

டாட்டா ஸ்கை: பிரபலமான டாட்டா ஸ்கை இதை அவசர கடன் சேவை என்று அழைக்கிறது. அருகில் உள்ள சில்லறை விற்பனை கடைகளிலிருந்து தங்களது ரீசார்ஜை செய்ய முடியாத சந்தாதாரர்களுக்காக இந்த கடன் வசதி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் எந்த சேவை கட்டணத்தையும் விதிக்கவில்லை என்றாலும், அவசர கடன் சேவையை தேர்ந்தெடுக்கும் டாட்டா ஸ்கை சந்தாதாரர்கள் கூடுதல் கடன் தொகையை பிறகு செலுத்த வேண்டும். சந்தாதாரர்கள் இந்த அவசர கடன் சேவையைப் பெற தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து 080-61999922 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். டிடிஎச் ஆப்ரேட்டர் இந்த தொகையை டாட்டா ஸ்கை கணக்கில் வரவு வைப்பார். மேலும் சந்தாதாரரின் கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அதை மீண்டும் செயல்படுத்துவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Tata sky dish tv and d2h dth operators offering instant credit188630

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X