/tamil-ie/media/media_files/uploads/2020/11/tata_sky.jpg)
Tata sky new broadband plans
Tata Sky New Broadband Plans Tamil News: டாடா ஸ்கை தன் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீண்டகால பிராட்பேண்ட் திட்டங்களும் அடங்கும். ரூ.2,400 வரை இந்த நிறுவனம் அதன் சலுகைகளை வழங்குகிறது.
இது தவிர, தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச லேண்ட்லைன் இணைப்பைக் கொண்டு வந்துள்ளது டாடா ஸ்கை. இது இந்நிறுவனத்தின் புதிய நடவடிக்கை. குறிப்பாகப் பல பிராட்பேண்ட் திட்டங்களைப் பயனர்களுக்கு புதிதாக வழங்கி வருகிறது.
தள்ளுபடி விகிதங்களுடன் டாடா ஸ்கை பிராட்பேண்ட் திட்டங்களின் பட்டியல்
தள்ளுபடி விகிதங்களுடன் வரும் டாடா ஸ்கை பிராட்பேண்ட் திட்டங்கள், 100 எம்.பி.பி.எஸ் முதல் 300 எம்.பி.பி.எஸ் வரையிலான வேகத்தை வழங்குகிறது. இதன் கீழ் நான்கு திட்டங்களை டாடா ஸ்கை வழங்குகிறது. 300 எம்.பி.பி.எஸ் திட்டத்தின் விலை, ஒரு மாதத்திற்கு ரூ.1,500. இருப்பினும், மூன்று மாதங்களுக்கான நீண்ட கால மற்றும் இடைக்கால திட்டப்படி சென்றால் ரூ.4,500 ரூபாய் வரை பயனர்கள் பெறுவார்கள்.
ஆறு மாத திட்டத்தின் விலை ரூ.8,400. அதாவது, ஒரு மாதத்திற்கு ரூ.1,400 செலவாகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரூ.100 தள்ளுபடியை டாடா ஸ்கை வழங்குகிறது. 12 மாத திட்டத்திற்கு ரூ.2,400 வரை சலுகை கொடுக்கிறது. 300 எம்.பி.பி.எஸ் வேகத்திற்கு ரூ.15,600 ரூபாய் பயனர்கள் செலுத்தவேண்டும்.
150 எம்.பி.பி.எஸ் வேகத்தைக் கொண்ட டாடா ஸ்கையின் மற்ற பிராட்பேண்ட் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.950 ரூபாயும், மூன்று மாத திட்டத்துக்கு ரூ.2,700 ஆகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.