டாட்டா ஸ்கை : சேனல்களுக்கான புதிய கட்டணங்கள் அறிவிப்பு… பிப்ரவரி 1 முதல் அமல்…

Tata Sky Declares TRAI-Compliant Channel Packs : நீங்கள் தேர்வு செய்யும் சேனல்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்றவாறு நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் தனியாக வசூலிக்கப்படும்.

By: January 28, 2019, 3:07:22 PM

Tata Sky new channel prices announced for users :  இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), கேபிள் டிவிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தைக் கொண்டு வந்தது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை பார்ப்பதற்கு மட்டும் கட்டணம் கட்டினால் போதும் என்ற விதிமுறை உள்ளது.

அனலாக் கேபிள் டிவி தொடர்புகள் அதிக அளவில் மக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருப்பதால், இதனை நடைமுறைப்படுத்த கால அவகாசம் கேட்டிருந்தது கேபிள் டிவி அமைப்புகளும், தனியார் டிடிஎச் நிறுவனங்களும்.

வருகின்ற 1ம் தேதி முதல் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர இருப்பதால், ஒவ்வொரு டி.டி.எச் நிறுவனங்களும் தங்களின் புதிய டேரிஃப்களை அறிவித்து வருகிறது. ஏற்கனவே ஏர்டெல் டிஜிட்டல் டிவி தங்களின் கட்டணங்களை அறிவித்துவிட்ட நிலையில் தற்போது டாட்டா ஸ்கை நிறுவனம் தங்களின் புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : ஏர்டெல் டி.டி.எச் : உங்களுக்கு விருப்பமான சேனல்களுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு..

சேனல்களை எப்படி தேர்வு செய்வது ?

டாட்டா ஸ்கை இணைய தளத்திற்கு செல்லுங்கள்… அங்கு உங்களுக்கு தேவையான சேனல்களை தேர்ந்தெடுக்க பேனல்கள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான பேக்கினை தேர்வு செய்யலாம்.

உங்களின் அலைபேசி எண் அல்லது சப்ஸ்கிரைபர்ஸ் ஐடி ஆகியவற்றைக் கொண்டும் லாக் இன் செய்யலாம். உங்களுக்கு ஒரு ஓ.டி.பி. அனுப்பப்படும்.

Tata Sky new channel prices announced for users

அதனை அங்கு செலுத்திய பின்பு, மூன்று தேர்வுகள் உங்களுக்கு காட்டப்படும். அதில் தற்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதே டிவி பேட்டர்ன்கள் மற்றும் பில்கள் இடம் பெற்றிருக்கும் ரெக்கமண்டட் ஃபார் யூ ஒன்று.

இரண்டாவது டாட்டா ஸ்கை பேக்

மூன்றாவது அனைத்து சேனல்களும் என்ற ஆப்சன்

Tata Sky new channel prices – Recommended for you Option

ஏற்கனவே நீங்கள் 745 பேக் ஒன்றை முன்னதாக பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் அதனையே ரெக்கமண்டட் ஃபார் யூவில் காட்டும். 745 ரூபாய்க்கான ஒரு பேக்கினை நீங்கள் தேர்வு செய்தால் நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் 245 ரூபாய் மற்றும் 500 ரூபாய் மதிப்புள்ள ப்ரிமீயம் ஸ்போர்ட்ஸ் இங்கிலீஷ் எச்.டி பேக் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும். அதில் 71 எஸ்.டி. சேனல்களும் 57 எச்.டி. சேனல்களும் பார்வையாளர்களின் பயன்பாட்டிற்கு வரும்.

Tata Sky new channel prices – All packs and Channels

ஆனால் இந்த பேக்கானது , ட்ராயின் புதிய கட்டுப்பாடுகளுக்கு மேலான கட்டணங்களைக் கொண்டுள்ளது. ஆனால் அதே பேக்கை பயனாளிகள் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

இந்த பேக்கில் விருப்பம் இல்லாதவர்கள் ஆல் பேக்ஸ் அண்ட் சேனல்ஸ் என்ற தேர்வை பயன்படுத்தலாம். அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் சேனல்களில் உங்களுக்கு விருப்பமான 100 சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

அதில் ஒவ்வொரு தனி சேனலுக்கும் மாதத்திற்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

நீங்கள் தேர்வு செய்யும் சேனல்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்றவாறு நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் தனியாக வசூலிக்கப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Tata sky new channel prices tata sky announces new trai compliant channel packs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X