Tata Sky Mobile Subscription: இந்தியாவின் முன்னணி டி.டி.எச் ஆபரேட்டர் நிறுவனமான ’டாடா ஸ்கை’, தற்போதுள்ள சந்தாதாரர்களுக்கு மொபைல் டிவியை மேம்படுத்த மேலும் பல சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது டாடா ஸ்கை அதன் தற்போதைய சந்தாதாரர்களுக்கு, ஒரு மாதத்திற்கு இலவச மொபைல் டிவி-யைப் பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி அவர்கள் அனைத்து டிவி சேனல்களையும் தங்கள் மொபைலில் ஆப்பில் பார்க்க முடியும். ஆண்ட்ராய்ட் மற்றும் IOS இரண்டிலும் அந்த ஆப்கள் கிடைக்கின்றன.
இன்றுவரை ஆப்பை பயன்படுத்தாத டாடா ஸ்கை சந்தாதாரர்களும் இந்த சலுகையைப் பெற முடியும். இந்த ஆப் பயன்பாட்டைப் பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்த பிறகு, ஒரு மாதத்திற்கு 400 க்கும் மேற்பட்ட இலவச சேனல்களை உங்கள் தொலைபேசியில் பார்த்து ரசிக்கலாம்.
டாடா ஸ்கை லைவ் டிவி பயன்பாட்டின் ஒரு நன்மை என்னவென்றால், சந்தாதாரர்கள் அதன் டெஸ்க்டாப் வழியாக சேனல்களைப் பார்க்கலாம். அதாவது லைவ் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். ஆனால் ஜியோ டிவி மொபைலில் மட்டுமே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.