Tata Sky slashed network fees under trai tariff scheme : புதிய கேபிள் டிவி கொள்கைகள் வந்தவுடன் டிவி பார்க்கும் ஆர்வமே பலருக்கும் குறைந்துவிட்டது. மேலும் புதிய டிவி சேனல்களை தேர்வு செய்து ஆட் செய்வதற்குள் பலருக்கும் வெறுத்தே விடுகிறது. ஆனாலும் அடிக்கடி ஆறுதல் தரும் செய்திகளை டி.டி.எச் நிறுவனங்கள் தருவது வழக்கம்.
அப்படியான அறிவிப்பு ஒன்றைத் தான் டாட்டா ஸ்கை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அவர்கள் வைத்திருக்கும் லைட் பேக்கேஜை நாம் தேர்வு செய்தால் நமக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்குவதுடன் நெட்வொர்க் சார்ஜையும் பாதியாக குறைத்துள்ளது. ஒரு நபர் தன் தேவைகளுக்காக 40 எச்.டி சேனல்களையும், 100 எஸ்.டி. சேனல்களையும் வாங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அவர் மாசாமாசம் ரூ. 245 என்ற அடிப்படை கட்டணத்தை செலுத்துகிறார் (நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் (ரூ. 153)+ 23x4).
ஆனால் எச்.டி. லைட் பேக்கேஜை வாங்கி, அதன் பின்னர் அவர் எவ்வளவு சேனல்களை ஆட் செய்தாலும் வெறும் 99 ரூபாய் கட்டணம் மட்டுமே செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 300 வரையில் கேபிள் டிவி கட்டணத்தை மிச்சம் செய்து கொள்ளலாம். தமிழ் லைட் பேக்கை நீங்கள் தேர்வு செய்தால், தமிழ் சேனல்களுக்கான மாதாந்திர நெட்வொர்க் கட்டணமான ரூ.114 தள்ளுபடி அளிக்கப்படும். என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் நெட்வொர்க் சார்ஜ் குறையும் பட்சத்தில் சேனல்களுக்கான கட்டணம் அதிகரிக்கும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க : இணைய சேவையில் பின்தங்கிய இந்தியா… ஒரே வருடத்தில் அசுர வளர்ச்சி கண்ட தென் கொரியா
இதில் ஒரு நல்ல விசயம் என்னவென்றால் தமிழ் லைட் பேக்கில் ஏற்கனவே அதிக தமிழ் சேனல்கள் இருக்கும். எனவே நீங்கள் புதிதாக சேனல்களை கட்டணம் கட்டி வாங்க வேண்டாம்.