Advertisment

Tata Sky DTH: பணம் கொடுக்கிறோம்ல... இந்த வசதியை இன்னும் ஏன் நீங்கள் முயற்சிக்கவில்லை?

Tata Sky New Channel Selection: சேனல்கள் தொகுப்பை (pack) பயனர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்ற விரும்பினால், அதை சுவாரஸ்யமாக வழங்குவது டாட்டா ஸ்கையின் தனிச்சிறப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tata Sky, Tata Sky Subscription

Tata Sky new channel selection, tata sky customer, tata sky recharge debit card, டாடா ஸ்கை, டாடா ஸ்கை புதிய சேனல்

Tata Sky Tamil News: டாட்டா ஸ்கை, HD சானல்கள் உட்பட 600 சானல்களை தனது சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது. தனது பயனர்களுக்கு வியக்கதக்க சேவைகளை வழங்குவதில் டாடா ஸ்கை டிடிஎச், முன்னணி டிடிஎச் சேவை வழங்குநர்களில் ஒன்றாகும். புதிய சேனல்களை சேர்த்து சேனல்கள் தொகுப்பை (pack) பயனர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்ற விரும்பினால், அதை சுவாரஸ்யமாக வழங்குவது டாட்டா ஸ்கையின் தனிச்சிறப்பு.

Advertisment

இந்த அம்சம் தனித்துவமானது. மேலும் குறிப்பிட்ட சில டிடிஎச் சேவை வழங்குபவர்கள் மட்டும் தான் இது மாதிரியான அம்சத்தை தங்களது பயனர்களுக்கு எளிமையாக அணுகும் வகையில் வழங்குகின்றனர். படிப்படியாக டாட்டா ஸ்கை டிடிஎச் சில் எப்படி சேனல்களை சேர்ப்பது என்பதை பார்ப்போம்.

எப்படி ஒரு சேனலை டாட்டா ஸ்கையில் சேர்ப்பது

tatasky.com/wps/portal என்ற வலைதள முகவரிக்கு செல்லவும்.

"Select packs" என்ற விருப்ப தேர்வை சொடுக்கவும்.

உங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது டாட்டா ஸ்கை சந்தாதாரர் அடையாள எண்ணை உள்ளீடு செய்யவும்.

நீங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்ததும் நீங்கள் ஒரு OTP ஐ பெறுவீர்கள். அந்த OTP ஐ உள்ளிட்ட உடன் கணக்கு திரை (accounts screen) திறக்கும்.

இப்போது, "Balances and charges” மற்றும் உங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்ய என இரண்டு பொத்தான்கள் தோன்றும். வலப்பக்கம் “Your Pack” என்ற ஒரு பெட்டி தெரியும். அதை சொடுக்கினால் நீங்கள் தற்போது தேர்ந்தெடுத்துள்ள (currently subscribed) அனைத்து சேனல்களின் தொகுப்பும் தெரியும்.

அந்த பெட்டியில் உள்ள இணைப்பை சொடுக்கினால் அடுத்த பக்கத்துக்கு எடுத்துச் செல்லும். அங்கே நீங்கள் தேவையில்லாத சேனல்களை deactivate செய்யலாம். பயனர் ஒவ்வொரு வகையின் (category) பக்கத்திலும் “+” அடையாளத்தை காணலாம்.

முதலில் உள்ளதை சொடுக்கினால் அது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அனைத்து தொகுப்புகளையும் காண்பிக்கும். உங்கள் டாட்டா ஸ்கை கணக்கின் பழைய பட்டியலில் இருந்து சில சேனல்களை சேர்க்க வேண்டும் என்றால் அந்த பெட்டியை uncheck செய்யவும். அடுத்து கீழேயுள்ள “Select and Proceed” என்பதை சொடுக்கவும்.

நீங்கள் unsubscribe செய்த சேனல்களை அடுத்த திரை காண்பிக்கும். அடுத்து உறுதிப்படுத்தும் பொத்தானை அழுத்தவும். உறுதிபடுத்தும் குறுஞ்செய்தி திரையில் தெரியும். மேலும் புதிய தொகுப்பு சில நிமிடங்களில் செயல்பாட்டுக்கு வரும்.

உங்கள் டாட்டா ஸ்கை கணக்கில் ஒரு சேனலை subscribe செய்ய மற்றொரு முறை ஆண்ட்ராய்ட் அல்லது iOS ஆப்பை திறக்கவும். 56633 என்ற எண்ணுக்கு இப்போது ஒரு SMS அனுப்பவும். சேனல் குறியீடை ADD ZEE14 அல்லது STARPLUS12 என்று தட்டச்சு செய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து 56633 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். உங்களுக்கு ஒரு உறுதிபடுத்தும் குறுஞ்செய்தி வரும் அடுத்து அந்த தொகுப்பு செயல்படுத்தப்படும்.

அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து 1800-208-6633 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு அழைப்பு செய்து சேனலை உங்கள் தொகுப்பில் சேர்க்க சொல்லவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment