அரங்கம் அதிரட்டுமே: டால்பி அட்மாஸ் உடன் டி.சி.எல். Z100 வயர்லெஸ் ஹோம் தியேட்டர் அறிமுகம்!

டி.சி.எல். நிறுவனம், டால்பி அட்மாஸ் ஃப்ளெக்ஸ்கனெக்ட் தொழில்நுட்பம் கொண்ட தனது புதிய டி.சி.எல். Z100 வயர்லெஸ் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

டி.சி.எல். நிறுவனம், டால்பி அட்மாஸ் ஃப்ளெக்ஸ்கனெக்ட் தொழில்நுட்பம் கொண்ட தனது புதிய டி.சி.எல். Z100 வயர்லெஸ் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
TCL Z100 Wireless Home Theatre System

அரங்கம் அதிரட்டுமே: டால்பி அட்மாஸ் உடன் டி.சி.எல். Z100 வயர்லெஸ் ஹோம் தியேட்டர் அறிமுகம்!

டி.சி.எல். நிறுவனம், டால்பி அட்மாஸ் ஃப்ளெக்ஸ்கனெக்ட் (Dolby Atmos FlexConnect) தொழில்நுட்பம் கொண்ட தனது புதிய Z100 வயர்லெஸ் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம், ஸ்பீக்கர்களை அறையின் எந்த இடத்திலும் வைக்கலாம். அதன்மூலம், சிறந்த மற்றும் தரமான ஒலி அனுபவத்தை (Immersive sound) தானாகவே வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்பீக்கர்கள், டி.சி.எல். நிறுவனத்தின் 2025 QD-மினி LED டிவிகளுடன் தடையின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய அம்சங்கள்

Advertisment

டால்பி அட்மாஸ் ஃப்ளெக்ஸ்கனெக்ட் (Dolby Atmos FlexConnect) அமெரிக்காவில் இந்தத் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் முதல் சவுண்ட்பார் ஆகும். இது சிக்கலான இணைப்பு இல்லாமல், ஸ்பீக்கர்களை அறையின் எந்த இடத்திலும் வைக்க உதவுகிறது. அறையின் அமைப்பு, ஸ்பீக்கர் அமைவிடம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு ஏற்ப ஒலியைத் தானாகவே சரிசெய்து, சிறந்த ஒலி அனுபவத்தை வழங்குகிறது.

NdFeB அரிமண் காந்தங்கள் (rare earth magnets), சில்க்-டோம் ட்வீட்டர்கள் மற்றும் இறுக்கமாகச் சுருட்டப்பட்ட வாய்ஸ் காயில்கள் (voice coils) போன்ற அம்சங்களுடன் புதிய ஸ்பீக்கர் வடிவமைப்பு உள்ளது. 170W RMS வெளியீடு வரை பிரத்யேக மெயின், பாஸ் மற்றும் ஹைட் சேனல்களை (1.1.1) ஆதரிக்கிறது. டி.சி.எல்-ன் QM8K, QM7K, மற்றும் QM6K QD-மினி LED டிவிகளுடன் இந்த சிஸ்டம் இணக்கமானது. பயனர்கள் 4 ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு வயர்லெஸ் சப்-வூஃபரைச் சேர்க்கலாம். TCL Z100 வயர்லெஸ் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர், ஒரு ஸ்பீக்கரின் விலை $399.99 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.35,100) ஆகும். இந்த ஸ்பீக்கர் பல பண்டல் (Bundle) விருப்பங்களிலும் கிடைக்கிறது. 

Z100 Duo: 2 ஸ்பீக்கர்கள் அடங்கிய தொகுப்பு. விலை $799.98 (தோராயமாக ரூ.70,200).

Advertisment
Advertisements

Z100 Trio+: 2 ஸ்பீக்கர்கள், ஒரு சப்-வூஃபர் அடங்கிய தொகுப்பு. விலை $1,299.97 (தோராயமாக ரூ.1,14,100).

Z100 Quartet+: 3 ஸ்பீக்கர்கள், ஒரு சப்-வூஃபர் அடங்கிய தொகுப்பு. விலை $1,699.96 (தோராயமாக ரூ.1,49,200).

இந்த ஸ்பீக்கர்கள் அமெரிக்காவின் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களில் தற்போது கிடைக்கின்றன. இந்த தயாரிப்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து டி.சி.எல். நிறுவனம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: