பிரபல முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா நிறுவனம் (டி.சி.எஸ்) 40,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது என்று தகவல் கூறப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் 2025-ல் மார்ச் மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.
டி.சி.எஸ்-ன் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட், நிறுவனத்தின் பணியமர்த்தல் உத்தியில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அடுத்த நிதியாண்டிற்கான கேம்பஸ் இன்டர்வியூ செயல்முறையை ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.
மார்ச் 2025 இல் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் 40,000 புதியவர்களை பணியமர்த்த டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது என்றார்.
செப்டம்பர் 2023 நிலவரப்படி, டி.சி.எஸ்-ன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 612,724 ஐ தொட்டது, இது முந்தைய காலாண்டில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். இந்த ஆண்டின் முதல் பாதியில் 11,000 புதியவர்களை வேலைக்கு எடுத்தது. மேலும் நிறுவனம் தீவிரமாக ஆட்சேர்ப்பு செய்து வருகிறது.
நிதிச் செயல்பாட்டின் அடிப்படையில், டி.சி.எஸ் இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் 5% அதிகரித்து ரூ.11,909 கோடியாக உள்ளது, காலாண்டின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 7.6% அதிகரித்து ரூ.64,259 கோடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“