நாளுக்குநாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை மக்களின் கவனத்தை மின்சார வாகனங்களின் பக்கம் ஈர்த்துள்ளது. பெட்ரோல் வாகனங்களை வாங்குவதா அல்லது மின்சார வாகனங்களை வாங்குவதா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் வாங்குவதே இன்றைய காலத்தில் சரியான முடிவாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உங்கள் பட்ஜெட் ஒருலட்சமாக இருந்து உங்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க விருப்பம் இருந்தால், சந்தையில் பல நல்ல ஸ்கூட்டர்கள் உள்ளன. டிசைன் முதல் மைலேஜ் வரை.. சிறப்பம்சங்கள் முதல் செயல் திறன் வரை... இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் 5 இ-ஸ்கூட்டர்கள் என்ன? என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
2025-ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில், மின்சார ஸ்கூட்டர் விற்பனை கடந்த கால சாதனைகளை முறியடித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 91 ஆயிரத்து 791 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இந்த விற்பனை 2023-ல் விற்பனை செய்யப்பட்டதை விட 40% அதிகம். ரூ.1 லட்சத்திற்கும் குறைவான இ-ஸ்கூட்டர்களே அதிகம் விற்பனையாகி உள்ளன.
1. ஓலா எஸ்1 எக்ஸ் [ரூ.73,999]
ஓலா நிறுவனத்தின் எஸ்1 எக்ஸ் 2 kWh பேட்டரி வேரியண்ட் மலிவான மற்றும் புத்திசாலித்தனமான விருப்பமாக பார்க்கப்படுகிறது. இது 9.3 bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது, 0-40 கி.மீ வேகத்தை அடைய 3.4 வினாடிகள் மட்டுமே ஆகும். இதன் விலை ரூ.73,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 108 கி.மீ தூரம் வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 101 கி.மீ வேகம் வரை செல்லலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/Dt6SlT9SrCVhHflmswZN.jpg)
2. டி.வி.எஸ். ஐக்யூப் [ரூ.93,434]
TVS மோட்டார்ஸின் இ-ஸ்கூட்டரான TVS iQUBE ஒரு சிறந்த தேர்வாகும். இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.93,434 ஆகும். இந்த ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ வரை பயணிக்கும். 5.9 bhp ஆற்றல் கொண்டது. 2.2 kWh பேட்டரி, சுமார் 7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 4.4 கிலோவாட் ஆற்றலை உருவாக்குகிறது. 0-40 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/Ghi9SUUPOHrWnWi8uAje.jpg)
3. ஓலா எஸ் 1 எக்ஸ் (3Kwh) [ரூ .97,999]
0-40 கிமீ வேகத்தை 3.1 விநாடிகளில் எட்டுகின்ற S1 X 3Kwh பேட்டரி கொண்ட மாடலில் அதிகபட்சமாக 7KW (9.38hp) பவர் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ கொண்டு முழுமையான 100 % சார்ஜிங் நிலையில் 176 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என 3 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 140 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 9 மணி நேரம் போதுமானதாகும். இந்த ஸ்கூட்டர் ஸ்போர்ட்ஸ் பயனர்களின் விருப்பமாக அமைகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/ORpux2rP6lnAijP3lAZ1.jpg)
4. பஜாஜ் சேட்டக் 2903 [ரூ.98,498]
பஜாஜ் சேட்டக் 2903 மின்சார ஸ்கூட்டரில் 2.9 kWh பேட்டரி, 123 கி.மீ. ரேஞ்ச் மற்றும் ஹில் ஹோல்ட் உள்ளது. வண்ணமயமான எல்.சி.டி டிஸ்ப்ளே, புளூடூத் இணைப்பு மற்றும் 21 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவை உள்ளன. 6 மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் ஏறிவிடும். அதிகபட்சமாக 63கி.மீ வேகத்தில் செல்லலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/WnB0R9pmBTC2x8ylt3ti.jpg)
5. ஹீரோ விடா வி2 லைட் [ரூ .74,000]
'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'விடா' நிறுவனத்தின் 'வி2' மின்சார ஸ்கூட்டர் 2.2 கி.வாட்.ஹார்., முதல் 3.94 கி.வாட்.ஹார்., வரை பேட்டரியின் திறன் மாறுபடுகிறது. இதன் ரேஞ்ச், 94 கி.மீ., முதல் 165 கி.மீ., வரை தருகிறது. இந்த பேட்டரியை ஸ்கூட்டரில் இருந்து எடுத்து, தனியாக சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த மாடல் பயனர்களுக்கு மிகவும் சிக்கனமானது.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/PCHMqCbCMb01V3hXwOKP.jpg)