New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/25/ambassador-2025-06-25-12-06-59.jpg)
இந்திய சாலைகளில் மீண்டும் கோலோச்ச வருகிறது 'எலக்ட்ரிக் அம்பாசிடர்'
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் "எலக்ட்ரிக் அம்பாசிடர்" புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளது. 2014-ல் உற்பத்தி நிறுத்தப்பட்ட பழம்பெரும் கார், நவீன தொழில்நுட்பத்துடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் திரும்பி வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய சாலைகளில் மீண்டும் கோலோச்ச வருகிறது 'எலக்ட்ரிக் அம்பாசிடர்'
Iconic ambassador car electric launch india: இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அம்பாசிடர் கார், புதிய அவதாரத்தில், அதாவது எலக்ட்ரிக் வாகனமாக மீண்டும் சாலைகளில் வலம் வரத் தயாராகி வருகிறது. 2014-ல் உற்பத்தி நிறுத்தப்பட்ட பழம்பெரும் கார், நவீன தொழில்நுட்பத்துடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் திரும்பி வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மார்ச் 2026-ல் எலக்ட்ரிக் அம்பாசிடர் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. "Hindustan Ambassador EV" என்ற பெயரில் வரவிருக்கும் இது, இந்தியாவின் நிலைத் தன்மைமிக்க போக்குவரத்து பயணத்தில் மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ரெட்ரோ-நவீன வடிவமைப்பு: பழமையான அம்பாசிடரின் தனித்துவமான அடையாளத்துடன், நவீனத்துவமும் இணைந்து, புதிய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
முழு எலக்ட்ரிக் சக்தி: பெட்ரோல், டீசல் என எதுவும் இல்லாமல், முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக இருக்கும். மென்மையான, சத்தம் இல்லாத, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பயணத்தை உறுதி செய்யும். நவீன கார்களில் உள்ள ஏர்பேக்குகள், ABS (Anti-lock Braking System) போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்களுடன் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரீமியம் உட்புறம்: விசாலமான, ஆடம்பரமான உட்புறத்துடன், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் சௌகரியமான இருக்கைகள் என அனைத்தும் இதில் இருக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 300-400 கி.மீ. தூரம் செல்லும் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம். இது தற்போதைய எலக்ட்ரிக் வாகன சந்தையில் போட்டிக்கு ஈடுகொடுக்கும்.
எலக்ட்ரிக் அம்பாசிடரின் விலை ரூ.10 முதல் ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது டாடா டிகோர் EV, டாடா எக்ஸ்பிரஸ்-டி EV, சிட்ரோயன் இசி3 போன்ற எலக்ட்ரிக் கார் மாடல்களுக்குப் போட்டியாக அமையும். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஒரு பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரித்து வருகிறது. இந்த கூட்டணி எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அம்பாசிடர் பிராண்டின் உரிமைகளை ஸ்டெல்லான்டிஸ் (Groupe PSA) வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. "எலக்ட்ரிக் அம்பாசிடர்" இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.