ரூ 199 மட்டும்தான்: அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களை அள்ளித்தரும் பிஎஸ்என்எல்

BSNL best postpaid & prepaid plans: ரூபாய் 199-க்கான போஸ்ட்பெய்ட் திட்டத்தை அப்டேட் செய்துள்ளது. அதில் கட்டணமில்லா அன்லிமிட்டட் ஆஃப்-நெட் மற்றும் ஆன்-நெட் கால்கள் செய்து கொள்ளும் புதிய வசதியை வழங்கியுள்ளது. 

Technology news in Tamil BSNL best postpaid & prepaid plans and annul recharge package offers

Technology news in Tamil: இந்தியாவின் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் ரூபாய் 199-க்கான போஸ்ட்பெய்ட் திட்டத்தை அப்டேட் செய்துள்ளது. அதில் கட்டணமில்லா அன்லிமிட்டட் ஆஃப்நெட் மற்றும் ஆன்நெட் கால்கள் செய்து கொள்ளும் புதிய வசதியை வழங்கியுள்ளது. 

கடந்த மாதம் ஜனவரி 10 தேதியோடு, கட்டணமில்லா வாய்ஸ் கால், அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் 300 நிமிட அழைப்புகள் உடன்  ஆஃப்நெட் போன்ற திட்டத்தை நிறுத்துவதாக கூறியிருந்தது. ஆனால் தற்போது இந்த ப்ளானில் புதிய அப்டேட்களை அளித்துள்ளது. 

199 போஸ்ட்பெய்ட் ப்ளான்:

பிஎஸ்என்எல்லின் இந்த புதிய திட்டம் பிஎஸ்என்எல், லேண்ட்லைன் மற்றும் பிற ஆபரேட்டர்களின் எண்களுக்கு அலைக்கும் வகையில் உள்ளது. அதோடு இலவச வாய்ஸ் கால்களும், வரும் அழைப்பை பகிரும் வசதியையும் சேர்த்துள்ளது. மற்றும் மாதந்தோறும் 25  ஜிபி  டேட்டா வழங்க உள்ளது. இந்த 25 ஜிபி டேட்டா  திட்டத்தை 75 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் செய்யும் வசதியையும் அளித்துள்ளது. இந்த புதிய திட்டம் பிப்ரவரி 1 முதல் அமலில் இருக்கும் என்று பிஎஸ்என்எல்லின்  சென்னை டிவிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் (நேற்று) வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 

பிஎஸ்என்எல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தை திருத்தி இருந்தது. அதில் ஈரோஸ் நவ் டிஜிட்டல் ஃப்ளாட் பார்மை பயன்படுத்தவும், 60 நாட்களுக்கு லோக்தூன் ஃப்ளாட் பார்மின் சந்தா கட்ட தேவை இல்லை எனவும் தெரிவித்திருந்தது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

1499 ப்ரிபெய்ட் ப்ளான்:

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ .1,499 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இதில் 24 ஜிபி டேட்டா வழங்குவதோடு அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்  அனுப்பும் வசதியையும் வழங்கியுள்ளது. 

1999 ஒரு வருட ப்ளான்:

நீங்ககள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் என்றால் உங்களுக்காக மற்றொரு புதிய வருடாந்திர திட்டத்தையும் வழங்கியுள்ளது. இதில் 

ரூ. 1999 வருடாந்திர கட்டணம் செலுத்தி, ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் (ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள்) போன்றவற்றை பெறலாம். இந்த திட்டத்திற்கு 365 நாட்கள் வரம்பு விதித்துள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Technology news in tamil bsnl best postpaid prepaid plans and annul recharge package offers

Next Story
ரூ.10,000 விலையில் அசத்தலான அம்சங்களுடன் சிறந்த ஸ்மார்ட்போன்கள்Redmi Realme Poco Samsung Budget Mobiles under Rs 10000 Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com