Technology news in Tamil : ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் சில சுவாரஸ்யமான ப்ரீபெய்ட் திட்டங்களை நிறைய சலுகைகளுடன் வழங்குகின்றன. எல்லா நெட்வொர்க்குகளுடனும் பேச அன்லிமிட்டட் வாய்ஸ் கால், அதிகமான டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான இலவச அணுகல் ஆகியவை இதில் அடங்கும். பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கான சந்தாக்களுடன் இந்த சலுகைகள் இவை அனைத்தையும் ரூ .500 க்கும் குறைவான திட்டத்தில் வழங்குகின்றன. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவற்றின் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது
ஜியோவின் பேஸ்ட் ப்ரீபெய்ட் திட்டங்கள்:
ஜியோவில் ரூ .401 –ல் ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இதில் தினசரி 3 ஜிபி டேட்டா, இந்தியாவுக்குள் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுடனும் பேச அன்லிமிட்டட் வாய்ஸ் கால், மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை வழங்குகிறது. அதோடு இந்த பட்ஜெட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் 1 ஆண்டுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா மற்றும் கூடுதல் 6 ஜிபி டேட்டா போன்றவற்றையும் வழங்குகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த, ஜியோ பயனர்கள் ஜியோ செயலியை பதிவிறக்கி, உங்கள் ஜியோ எண்ணிலிருந்து OTP ஐப் பயன்படுத்தி உள்நுழையலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil
ரிலையன்ஸ் ஜியோ ரூ .444 – ற்கு ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்கி வருகிறது. இதில் எந்த நெட்வொர்க்குகளுடனும் பேச அன்லிமிட்டட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 56 நாட்களுக்கு ஜியோ செயலியை பயன்படுத்துவதற்கான கூடுதல் சலுகை போன்றவற்றையும் வழங்குகிறது. அதோடு தினசரி 2 ஜிபி டேட்டாக்கள் வழங்குவதன் மூலம் நீங்கள் 112 ஜிபி டேட்டாவை நீங்கள் பெறலாம்.
ரூ .249-திற்கான திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை நீங்கள் பெறலாம். அதாவது 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி டேட்டா. இதில் அனைத்து நெட்வொர்க்குகளுடனும் பேச அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் வழங்கப்படுகின்றது.
ஏர்டெல் பேஸ்ட் ப்ரீபெய்ட் திட்டங்கள்:
ஏர்டெல் ரூ .349-திற்கு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வருகிறது. இதில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, இணையத்தின் வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். அதோடு அன்லிமிட்டட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அமேசான் பிரைமுக்கு இலவச சந்தா ஆகியவற்றையும் பெற சலுகை வழங்கியுள்ளது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுவைத்தால், அதுவரை மட்டுமே அமேசான் பிரைம் உறுப்பினர் திட்டமும் நீடிக்கும்.அதோடு இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் பேக் சந்தா, இலவச விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன், இலவச ஆன்லைன் படிப்புகள் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவையையும் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil
ஏர்டெல்லில் ரூ .448- க்கான ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இதில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை வழங்குகிறது. அதோடு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா, இலவச விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி போன்றவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது . மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ .150 கேஷ்பேக் ஆகியவற்றைப் பெறலாம்.
வோடபோன் பேஸ்ட் ப்ரீபெய்ட் திட்டங்கள்:
வோடபோன் (விஐ) முன்பு ரூ .405 – திற்கு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வருகிறது. இதில் 90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால், மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் அடங்கும். அதோடு Zee5 ஜி5 பிரீமியம், மற்றும் விஐ டிவி திரைப்படங்களுக்கு ஒரு வருட சந்தாவையும் பெறலாம். மற்றும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ரூ 449- திற்கான வோடபோன் திட்டமும் உள்ளது. இதில் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, உள்ளூர், எஸ்டிடி போன்ற அழைப்புகளுக்கு அன்லிமிட்டட் வாய்ஸ் கால், அனைத்து நெட்வொர்க்குகளுடனும் பேச இலவச ரோமிங், மற்றும் ஒரு நாளைக்கு 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil