பேட்டரி, கேமரா, டிஸ்ப்ளே வசதிகள்: இந்த 3 பட்ஜெட் போன்களில் உங்க சாய்ஸ் எது?

technology news in tamil, samsung redmi note mobile comparison: ரூ.15,000 க்கு கீழ் மொபைல் வாங்கும் ஒருவருக்கு அதன் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் மிக முக்கியம். எனவே இங்கு கேலக்ஸி எஃப் 12, ரெட்மி நோட் 10 மற்றும் கேலக்ஸி எம் 12 ஆகிய மூன்று வகையான மொபைல் போன்களை ஒப்பிட பட்டுள்ளது. இந்த ஒப்பீடு விலை மற்றும் வசதிகள் சார்ந்தது மட்டுமே. இதன் மூலம் உங்களுக்கு தேவையான சரியான மொபைலை வாங்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருக்காதவர்களை பார்ப்பது கடினம். எல்லோருக்கும் அதன் வசதிகள் தேவைப்படுகிறது. இருப்பினும், அதிக விலை கொடுத்து ஒரு மொபைலை வாங்குவதை விட , நமக்கு தேவையான வசதிகளுடன்,  நம் பட்ஜெட்க்குள் ஒரு மொபைலை வாங்குவது சிறந்தது. அதிலும், ரூ.15,000 க்கு கீழ் மொபைல் வாங்கும் ஒருவருக்கு அதன் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் மிக முக்கியம். எனவே இங்கு கேலக்ஸி எஃப் 12, ரெட்மி நோட் 10 மற்றும் கேலக்ஸி எம் 12 ஆகிய மூன்று வகையான மொபைல் போன்களை ஒப்பிட பட்டுள்ளது. இந்த ஒப்பீடு விலை மற்றும் வசதிகள் சார்ந்தது மட்டுமே. இதன் மூலம் உங்களுக்கு தேவையான சரியான மொபைலை வாங்கலாம்.

விலை ஒப்பீடு

கேலக்ஸி எஃப் 12, இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று 4ஜிபி/64ஜிபி இதன் விலை ரூ.10,999. மற்றொன்று 4ஜிபி/128ஜிபி இதன் விலை ரூ.11,999. மற்ற இரண்டு மொபைல்களைப் போல் 6ஜிபி ரேம் இல்லையென்றாலும் இது தான் விலை குறைவானது.

ரெட்மி நோட் 10, இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று 4ஜிபி/64ஜிபி இதன் விலை ரூ.11,999.  மற்றொன்று  6ஜிபி/128ஜிபி இதன் விலை ரூ.13,999

கேலக்ஸி எம் 12, இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று 4ஜிபி/64ஜிபி இதன் விலை ரூ.10,999. மற்றொன்று 6ஜிபி/128ஜிபி இதன் விலை ரூ.13,499

டிசைன் & டிஸ்ப்ளே ஒப்பீடு

சாம்சங் கேலக்ஸி எஃப் 12ஐ பொறுத்தவரை சற்று பருமனானது. இதன் எடை 221கிராம். மேலும் இது பிளாஸ்டிக் கவருடன் வருகிறது. இது. 6.5 இன்ச் ஹெச்டி + (720 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் உள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் Display Refresh Rate கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 10, ஆனது, 178 கிராம் எடையுடன் பாலிகார்பனேட் கவருடன் வருகிறது. 6.43 இன்ச் AMOLED HD + (1080 x 2400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன் உள்ளது. இது 60 ஹெர்ட்ஸ் Display Refresh Rate கொண்டுள்ளது. ஹோல் பஞ்ச் செல்பி கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 12, பாலிகார்பனேட் கவருடன் வருகிறது. 6.5 இன்ச் ஹெச்டி + (720 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் உள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் Display Refresh Rate கொண்டுள்ளது. இரண்டு சாம்சங் மொபைல்களும் சிறந்த Display Refresh Rate வழங்கும் அதே வேளையில் ரெட்மி அதிக தெளிவுத்திறன் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

கேமரா ஒப்பீடு

கேலக்ஸி எஃப் 12ல், குவாட் கேமரா அமைப்புடன் உள்ளது. முதன்மை 48MP ஷூட்ட்ர்,  5MP அல்ட்ரா வைட் கேமரா, 2MP மேக்ரோ மற்றும் டெலிஃபோட்டோ கேமரா, மற்றும் 8MP முன்பக்க கேமரா

ரெட்மி நோட் 10ல், குவாட் கேமரா அமைப்புடன் உள்ளது. முதன்மை 48MP ஷூட்ட்ர், 8MP அல்ட்ரா வைட் கேமரா, மற்றும் 2MP மேக்ரோ கேமரா, 2MP சென்சார், மற்றும் 13MP முன்பக்க கேமரா

கேலக்ஸி எம் 12ல், குவாட் கேமரா அமைப்புடன் உள்ளது. முதன்மை 48MP ஷூட்ட்ர், 5MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா, 2MP சென்சார், மற்றும் 8MP முன்பக்க கேமரா.

ப்ராஸஸர், ரேம் மற்றும் பேட்டரி ஒப்பீடு

கேலக்ஸி எஃப் 12, சாம்சங் எக்ஸினோஸ் 850 ப்ராஸஸர், ஆக்டா கோர் சிப்செட், ரேம் 4ஜிபி, மெமரி 128 ஜிபி

கேலக்ஸி எம் 12, சாம்சங் எக்ஸினோஸ் 850 ப்ராஸஸர், ஆக்டா கோர் சிப்செட், ரேம் 6ஜிபி, மெமரி 128 ஜிபி,

இரண்டு மொபைல்களுமே, சாம்சங் ஒன் கோர் 3.1 மென்பொருளுடன் ஆண்ட்ராய்டு 11ல் இயங்குகிறது. இவற்றின் பேட்டரி திறன் 6000mAh மற்றும் சார்ஜிங் திறன் 15W ஆக உள்ளது.

ரெட்மி நோட் 10, ஸ்னாப்டிராகன் 678 சிப்செட், 6ஜிபி ரேம், மற்றும் 128 ஜிபி மெமரி, சியோமியின் MIUI 12 மென்பொருளுடன், ஆண்ட்ராய்டு 11ல் இயங்குகிறது. இதன் பேட்டரி திறன் 5000 mAh மற்றும் சார்ஜிங் திறன் 33W ஆக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Technology news in tamil samsung redmi mobile comparison

Next Story
இனி ஆண்ட்ராய்டிலிருந்து iOS சாதனங்களுக்கு சாட்களை மாற்றுவது எளிது!Whatsapp to make it easier for you to transfer chats between android and ios Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com