2021ம் ஆண்டிற்கான காதலர் தின கொண்டாட்டம் நெருங்கி விட்டது. இந்த காதலர் தினத்தில் உங்களுடைய பாட்னருக்கு என்ன கிப்ட் அளிப்பது என்று அறியாமல் குழம்பி இருப்பீர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் பரிசாக எதை கொடுப்பது என்று தேடித் கொண்டிருப்பீர்கள். ரூ.2,000 முதல் ரூ .1 லட்சம் வரையிலான சில சிறந்த கேஜெட்களை இங்கே நாங்கள்பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலில் ஹேர் ஸ்ட்ரைட்டனர்கள், உடற்பயிற்சியின் போது (ஃபிட்னஸ்) அணியக்கூடியவை, தொலைபேசிகள், இயர்போன்கள், பவர் பேங்குகள் மற்றும் பல உள்ளன.
ரூ .5,000 க்கு கீழ் உள்ள கிப்ட்ஸ்:
இந்தப் பட்டியலில் முதலாவது உள்ளது ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் (OnePlus Bullets Wireless Z) இயர்போன் ஆகும். இது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாங்கக்கூடிய சிறந்த நெக் பேண்ட் பாணி வயர்லெஸ் இயர்போன்களில் ஒன்றாகும். இந்த இயர்போன் அமேசானில் ரூ.1,999 க்கு கிடைக்கிறது. இதில் 9.2 மிமீ டைனமிக் டிரைவர், குறைந்த லேடென்சி பயன்முறை, ஐபி 55 மதிப்பீடு, இசையை இடைநிறுத்துவதற்கும், தொடங்குவதற்கும் காந்தக் கட்டுப்பாடு, என இன்னும் பல கிடைக்கின்றது.
அதோடு நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல வயர்லெஸ் இயர்போன்களைத் தேடுகிறீர்களானால், ஒப்போ என்கோ டபிள்யூ 31 (Oppo Enco W31) தற்போது அமேசானில் ரூ .2,999 தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. அதோடு இதற்கு மாற்றாக, ஒன்பிளஸ் பட்ஸ் இசட் (OnePlus Buds Z ) ரூ.2,799 விலையில் உள்ளது. அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளலாம்.
இயர்போன்களைத் தவிர, பவர் பேங்களும் பரிசளிப்பதற்கான சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும். பயனர்கள் Mi.com இல் பட்டியலிடப்பட்டுள்ள Xiaomi இன் 10,000mAh Mi வயர்லெஸ் பவர் பேங்யை ரூ .2,499 க்கு வாங்கலாம். உங்கள் பட்ஜெட் சற்று குறைவாக இருந்தால், நீங்கள் 20,000 எம்ஏஎச் பவர் பேங்யை வாங்கலாம். இது ரூ .1,499 க்கு கிடைக்கிறது.
அதோடு ரூ 2,499 க்கு விற்பனையில் உள்ள மி பேண்ட் 5 ஃபிட்னஸ் பேண்ட் (வாட்ச் )வாங்க நீங்கள் ஒருவருக்கு பரிசீலிக்கலாம்.
ரூ .20,000 க்கு கீழ் உள்ள கிப்ட்ஸ்:
உங்கள் பட்ஜெட் ரூ .10,000 க்கு கீழ் இருந்தால், (MI) மி வாட்ச் ரிவால்வ் வாங்க இது சிறந்த நேரம். ஏனெனில் இது தற்போது ரூ .7,999 க்கு குறைந்த விலையில் கிடைக்கிறது. இது இந்தியாவில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டபோது இதன் விலை ரூ .10,990- ஆக இருந்தது.
5 ஜி வசதியுடன் தற்போது வந்துள்ள ஸ்மார்ட்போனான மி 10i யையும் நீங்கள் பரிசாக வழங்கலாம். இதை Mi.com ஒரு இடைப்பட்ட விலையுடன் ரூ .20,999 க்கு விற்பனை செய்து வருகிறது.
ரூ .40,000 க்கு கீழ் உள்ள கிப்ட்ஸ்:
புத்திசாலித்தனமாக வெப்ப மேலாண்மை கட்டுப்பாடுகளை ஆதரிக்கும் மற்றும் மினியேச்சர் வி 9 மோட்டார் மூலம் இயக்கப்படும் டைசன் ஏர்விராப் ஹேர் ஸ்டைலரை பரிசளிப்பதை நீங்கள் பரிசீலிக்கலாம். ஹேர் ஸ்டைலர் அமேசானில் ரூ .36,900 க்கு விற்கப்படுகிறது. அதோடு அமேசானில் ரூ .36,900 தள்ளுபடி விலையில் கிடைக்கும் டைசனின் கோரல் ஹேர் ஸ்ட்ரைட்டீனரையும் நீங்கள் பரிசாக வழங்கலாம்.
வயர்லெஸ் இயர்போன்களுக்காக ரூ .25,000 வரை செலவிட முடிவு செய்தால், (AirPods Pro) ஏர்போட்ஸ் புரோவை வாங்கவும். இது தற்போது ரூ .24,900 கிடைக்கிறது. ஸ்மார்ட் வாட்சை பரிசளிக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 பரிசீலிக்கலாம். இதன் விலை ரூ .29,990.
40,000 க்கு மேல் உள்ள கிப்ட்ஸ்:
நீங்கள் விரும்புபவர் உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் அவருக்கு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 –யை பரிசீலிக்கலாம். இருப்பினும், இது மிகவும் விலை உயர்ந்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் ரூ .40,900 விற்கப்படுகிறது. இந்த சாதனம் சிறந்த உருவாக்க தரம், சிறந்த காட்சி, நம்பகமான சுகாதார கண்காணிப்பு மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு கருவிகளை கொண்டுள்ளது.
விலையுயர்ந்த மற்றும் விரிவான பரிசுகளை வழங்க விரும்புபவர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ரூ .1,05,999 ஆரம்ப விலையுடன் வருகிறது. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து நீங்கள் அதை வாங்கினால், நீங்கள் எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைகளில் ரூ .10,000 கேஷ்பேக் பெறலாம். சாம்சங் ஷாப் பயன்பாட்டில் கூடுதலாக ரூ .2,000 தள்ளுபடியும் உள்ளது.
மாற்றாக, அமேசானில் ரூ .79,413 க்கு விற்கப்படும் ஐபோன் 12 ஐ ஒருவர் வாங்க பரிசீலிக்கலாம். எச்.டி.எஃப்.சி வங்கி அட்டை பயனர்கள் ரூ.6,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். கிரெடிட் கார்டு, கிரெடிட் ஈஎம்ஐ மற்றும் டெபிட் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும். இதே சலுகை ஐபோன் 12 மினிக்கும் கிடைக்கிறது. அந்த அதிகாரப்பூர்வ தளத்தில் ரூ .65,900 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை பரிசளிக்க விரும்பினால், உங்கள் பட்ஜெட் சுமார் 45,000 ரூபாய் என்றால், ஒன்பிளஸ் 8 டி உள்ளது. அமேசான் இந்த 5 ஜி சாதனத்தை ரூ .42,999 க்கு விற்கிறது. மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ .3,000 உடனடி தள்ளுபடியும் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil