சமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியாவுக்கு புதிய விதிகள் : குறைகள் தீர்க்க புதிய அதிகாரி

New Rules For Social Media : OTT நிறுவனங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான சமூக ஊடக வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

New Rules For Social Media and OTT Media : தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 ன் கீழ் சமூக ஊடக தளங்கள், OTT பிளேயர்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான புதிய விதிகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி சமூக ஊடக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் :

பயனர்களிடமிருந்து வரும் புகார்களைத் தீர்க்க சமூக ஊடக நிறுவனங்கள் ஒரு நெறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.

சட்டம் மற்றும் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கு பொறுப்பான தலைமை இணக்க அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி, சட்ட அமலாக்க நிறுவனங்களுடன்  24 மணி நேரமும் ஒருங்கிணைப்புக்கான நோடல் தொடர்பு நபராக இருக்க வேண்டும்.

குறை தீர்க்கும் அதிகாரி, குறை தீர்க்கும் நெறிமுறையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்கள் ஒரு முதன்மை இணக்க அதிகாரியைக் கொண்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பயனாளர்களின் குறை தீர்க்கும் அதிகாரி, உட்பட அனைவரும் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். இது தொடர்பாக சமூக ஊடக நிறுவனங்கள் மாதாந்திர இணக்க அறிக்கையையும் வெளியிட வேண்டும்

“பயனர்களின் கவுரவத்திற்கு எதிராக புகார்கள் இருந்தால், குறிப்பாக தனிநபர்கள், நிர்வாணம், பாலியல் செயல்கள், ஆள்மாறாட்டம், மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பான பதிவுகள் குறித்து புகார் வந்தால் அதனை 24 மணி நேரத்திற்குள் அதை நீக்க வேண்டும்.

ஒரு செய்தியை உருவாக்குபவர் :

ஒரு செய்தியை முதலில் உருவாக்குபவரை’ கண்காணிக்கவும், இந்தியாவில் அவர்களின் தொடர்பு முகவரியை அதன் வலைத்தளம், மொபைல் பயன்பாடு அல்லது இரண்டிலும் வெளியிட வேண்டும். செய்தியின் உள்ளடக்கத்தில் அக்கறை இல்லை என்றாலும், அந்த செய்தியை’ யார் தொடங்கினார்கள் என்பதை அவர்கள் அறியும் வகையில் இருக்க வேண்டும். போலி ட்வீட் அல்லது செய்தியின் முதல் தோற்றம் குறித்து சமூக ஊடக தளங்கள் வெளியிட வேண்டும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை, பொது ஒழுங்கு, கற்பழிப்பு அல்லது பாலியல் ரீதியாக வெளிப்படையான எந்தவொரு விஷயத்திலும் இந்த விதிமுறை முக்கியமாக தேவைப்படும் ஒன்றாகும். தங்கள் கணக்குகளை தானாக முன்வந்து சரிபார்க்க விரும்பும் பயனர்கள் தங்கள் கணக்குகளை சரிபார்க்க பொருத்தமான நெறிமுறையை வழங்குவதோடு, சரிபார்க்கக்கூடிய மற்றும் காணக்கூடிய சரிபார்ப்பு அடையாளத்துடன் வழங்கவேண்டும்.

OTT உள்ளடக்க தளங்கள், டிஜிட்டல் மீடியா

OTT தளங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா செய்தி ஊடக இணையதளங்களுக்கும் குறை தீர்க்கும் முறைக்கு அரசு வழி வகுத்துள்ளது. OTT இயங்குதளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களை சுய-கட்டுப்பாட்டுடன் இருக்கவும், எந்தவொரு குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கான நெறிமுறையும் உருவாக்க வேண்டும். படங்களுக்கு தணிக்கை சான்று இருக்கும்போது, ​​OTT இயங்குதளங்கள் அவற்றின் திரைப்படங்களையும் உள்ளடக்கத்தையும் வயது அடிப்படையில் சுயமாக வகைப்படுத்த வேண்டும்.

OTT பயனாளர்கள் 13+, 16+ மற்றும் பெரியவர்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும். மேலும் இந்த தளங்களுக்கு எந்தவிதமான தணிக்கைகளையும் கொண்டு வரவில்லை என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் பூட்டு (Parental lock) மற்றும் அதனுடன் இணங்குவதை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறை இருக்க வேண்டும். நெட்ஃபிக்ஸ் போன்ற தளங்களில் ஏற்கனவே பெற்றோர் பூட்டுக்கு ஒரு விருப்பம் உள்ளது.

டிஜிட்டல் மீடியாவில் செய்தி வெளியிடுவோருக்கு, அவர்கள் “இந்திய பத்திரிகை கவுன்சிலின் பத்திரிகை நடத்தை விதிமுறைகளையும் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் ஆஃப்லைன் (அச்சு, டிவி) மற்றும் டிஜிட்டல் மீடியா நிரல் குறியீட்டையும் கடைபிடிக்க வேண்டும்.  அரசாங்கத்தின் கூற்றுப்படி. இது மூன்று நிலை குறை தீர்க்கும் நெறிமுறையையும் விரும்புகிறது. இதில் வெளியீட்டாளர்களின் சுய கட்டுப்பாடு அடங்கும்.

சுய கட்டுப்பாடு வெளியீட்டாளர்களின் சுய-கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் மேற்பார்வை நெறிமுறைகள்:

டிஜிட்டல் மீடியா அனைத்தும் இந்தியாவை தளமாகக் கொண்ட ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும், அவர் பெறும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு 15 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும். வெளியீட்டாளர்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுய ஒழுங்குமுறை அமைப்புகள் இருக்கலாம். விதிகளின்படி, இந்த அமைப்பு “உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, உயர்நீதிமன்றம் அல்லது சுயாதீனமான புகழ்பெற்ற நபர் ஆகியோர் தலைமையில் இருக்கும். மேலும் ஆறு உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.” மேலும் இது குறித்து  தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த அமைப்பு வெளியீட்டாளர் நெறிமுறைகளை கடைபிடிப்பதை மேற்பார்வையிடவும், 15 நாட்களுக்குள் வெளியீட்டாளரால் தீர்க்கப்படாத குறைகளை நிவர்த்தி செய்யவும் உதவும்.

மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு மேற்பார்வை நெறிமுறையை உருவாக்கும். இது நடைமுறைகள் குறியீடுகள் உட்பட சுய-ஒழுங்குபடுத்தும் அமைப்புகளுக்கான ஒரு சாசனத்தை வெளியிடும். குறைகளை கேட்க இது ஒரு இடை-துறை குழுவை நிறுவும்.

இது தொடர்பாக தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,

“நாங்கள் எந்த புதிய சட்டத்தையும் உருவாக்கவில்லை. தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த விதிகளை நாங்கள் வகுத்துள்ளோம், சமூக வலைதளங்கள்”இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். “இந்த வழிகாட்டுதலின் கவனம் சுய கட்டுப்பாட்டில் உள்ளது.” இந்த விதிகள் வெளியிடப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். விதிகள் ஒரு குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகர் மற்றும் ஒரு வழக்கமான சமூக ஊடக இடைத்தரகர் ஆகியோருக்கு இடையில் வேறுபாட்டைக் காட்டும்.

50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட பயனாளர்கள் இதில்  பரிசீலிக்கப்படுவார்கள் என்றும், ஒரு குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகர் யார் என்பதை தீர்மானிக்க பயனர் அளவை அரசாங்கம் இன்னும் வரையறுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Technology news scoial media facebook whatsapp new rules

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express