Tech news Telegram 8.5 version update: பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான டெலிகிராம், சுமார் 100 கோடி பயனாளர்களை கடந்து உலகளவில் சாதனை படைத்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களை கவர அப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்கு வரவிருக்கும் டெலிகிராம் செயலியின் புதிய 8.5 வெர்ஷனில், வீடியோ ஸ்டிக்கர், மெசேஜ் ரியாக்ஷன் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
வீடியோ ஸ்டிக்கர்
டெலிகிராம் 8.5 அப்டேட்டின் முக்கிய சிறப்பு அம்சம் வீடியோ ஸ்டிக்கர் தான். முன்பு, வீடியோ ஸ்டிக்கர் பயன்படுத்த அடோப் இலஸ்ட்ட்ரேட்டர் செயலியின் உதவியை நாட வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அதனை நேரடியாக டெலிகிராம் செயலியில் செய்துவிடலாம். வீடியோக்களை இன்போர்ட் செய்து, அதனை ஸ்டிக்கர்களாக கன்வர்ட் செய்து, தனி நபருக்கோ அல்லது குரூப்கோ அனுப்பலாம்.
அட்வான்ஸூடு மெசேஜ் ரியாக்ஷன்
டெலிகிராம் செயலியில் முந்தைய அப்டேட்டிலே மற்ற செயலிகளை போலவே மெசேஜ் ரியாக்ஷன் வசதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த புதிய அப்டேட் மூலம்,குறிப்பிட்ட மெசேஜ்க்கு ரியாக்ஷன் அனுப்புகையில் நீண்ட நேரம் அழுத்தினால், பெரிய சைஸில் ரியாக்ஷனை அனுப்பிட முடியும். மெசேஜ் ரிசிவ் ஆகும் இடத்திலும், அதே சைஸிலான இமெஜ் பார்த்திட முடியும். இப்படி ரியாக்ஷன் ரிசீவ் ஆகியிருக்க என்றால், சாட் வெளியேவும் உள்ளேயும் பேட்ச் தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய இன்டராக்டிவ் எமோஜி
டெலிகிராம் செயலியில் புதிதாக 5 இன்டராக்டிவ் எமோஜிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை பெரியதாகவும், பார்ப்பதற்கு லைவ்வாகவும் தோன்றும் வகையில் இருக்கும். அனிமேஷனுக்கு ரிப்ளை செய்திடும் எமோஜியும் இடம்பெற்றுள்ளன.
மற்ற வசதிகள்
முந்தைய சாட்-க்கு விரைவாகச் செல்ல பயனர்கள் தற்போது பேக் பட்டனை அழுத்திப் பிடிக்க வேண்டும். கால் அழைப்பின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்லைன்ட் மெசேஜை இனி ஷேர் மேனுவிலிருந்தப்படியே அனுப்பலாம். ஐஓஎஸ் தளத்தில், நீங்கள் டேப்களில் மாறுகையில், கீழே உள்ள பாட்டம் பார் அனிமேட் ஆகும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil