Advertisment

டெலிகிராமில் க்ரூப் வீடியோ அழைப்புகள் எவ்வாறு செய்வது?

Telegram adds group video calls animations more in new update டெக்ஸ்ட் செய்திகள், ஸ்டிக்கர்கள் மற்றும் இமோஜிகளுக்கான புதிய செய்தி அனிமேஷன்களும் உள்ளன.

author-image
WebDesk
New Update
Telegram adds group video calls animations more in new update Tamil News

Telegram adds group video calls animations more in new update Tamil News

Telegram adds group video calls animations more in new update Tamil News : இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கை புதுப்பித்தலுக்குப் பிறகு டெலிகிராம் பிரபலம் ஆனது. இதன் போட்டியாளர் பல அம்சங்களை வழங்கியிருந்தாலும், டெலிகிராம் அங்கு முழுமை நிரம்பிய செய்தியிடல் சேவைகளில் ஒன்று. இது வாட்ஸ்அப்பில் இருந்த ஒரு முக்கிய அம்சத்தை இன்னும் கொண்டிருக்கவில்லை. அதுதான் க்ரூப் வீடியோ அழைப்புகள்.

Advertisment

டெலிகிராம் இப்போது புதிய புதுப்பித்தலுடன், க்ரூப் வீடியோ அழைப்பு ஆதரவை கொண்டு வருவது மட்டுமல்லாமல், திரை பகிர்வு மற்றும் சத்தம் கட்டுப்படுத்துதல் போன்ற பிற புதிய அம்சங்களையும் கொண்டு வந்துள்ளது. அனைத்து புதிய அம்சங்களையும் இனி பார்க்கலாம்.

க்ரூப் வீடியோ அழைப்புகள்

டெலிகிராம் பயனர்கள் இப்போது அந்தப் பயன்பாட்டில் அல்லது டெலிகிராம் வெப் பிளாட்ஃபார்மில் முழுத்திரை வீடியோ அழைப்புகளைச் செய்யலாம். ஜூம் மற்றும் கூகுள் மீட் போன்ற கான்பரன்சிங் கருவிகளில் உள்ள அம்சங்களோடு, சத்தம் கட்டுப்படுத்துதல் மற்றும் டேப்லெட் ஆதரவு போன்ற அம்சங்களையும் சேர்க்கிறது.

டேப்லெட் மற்றும் டெஸ்க்டாப்பில், பங்கேற்பாளர்களின் பட்டியலுடன் வீடியோ கிரிட், பிளவு-திரை காட்சியில் வீடியோ அழைப்புகள் தோன்றும். க்ரூப் வீடியோ அழைப்புகள் ஒரு தனி சாளரத்தில் திறக்கப்படும். மேலும், வீடியோ அழைப்பைக் குறைக்காமல் பயனர்கள் பிற விஷயங்களைச் செய்ய அனுமதிக்கும்.

அனிமேஷன் பின்னணிகள், செய்தி அனிமேஷன்கள்

டெலிகிராம் அதன் UI-ல் பல மாற்றங்களைச் சேர்க்கிறது. அனிமேஷன் செய்யப்பட்ட பின்னணிகளுக்கான ஆதரவும் இப்போது உள்ளது. அங்கு நீங்கள் செய்திகளை அனுப்பும்போது மற்றும் பெறும்போது வண்ணங்களும் வடிவங்களும் பின்னணியில் மாறக்கூடும். டெக்ஸ்ட் செய்திகள், ஸ்டிக்கர்கள் மற்றும் இமோஜிகளுக்கான புதிய செய்தி அனிமேஷன்களும் உள்ளன.

டெலிகிராம் இப்போது iOS-ல் மேலும் இரண்டு ஐகான்கள், உள்நுழைவு தகவல் நினைவூட்டல்கள், கட்டளைகள் இருந்தால் பட்டியலை உலவ ஒரு போட் மெனு மற்றும் இன்னும் அனிமேஷன் செய்யப்பட்ட இமோஜிகளை சேர்க்கிறது. மேலும், டெவலப்பர்களுக்கான புதிய கருவிகளை வெளியிடுகிறது. இது மக்கள் தங்கள் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கி அவற்றை ஒரே கிளிக்கில் பயன்பாட்டில் இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது.

இந்தப் புதிய அம்சங்கள் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து பயன்பாட்டு புதுப்பிப்பில் வர வேண்டும். உங்களிடம் ஏற்கனவே இது இல்லையென்றால் விரைவில் அதைப் பெறுவீர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Telegram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment