Advertisment

டெலிகிராமின் புத்தாண்டு பரிசு… 6 முக்கிய அப்டேட்கள் இதோ

டெலிகிராம் செயலி புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அதில், மெசேஜ் ரியாக்ஷன், மொழிபெயர்ப்பு, ரகசிய தகவல் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

author-image
WebDesk
New Update
டெலிகிராமின் புத்தாண்டு பரிசு… 6 முக்கிய அப்டேட்கள் இதோ

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் என போட்டி நிறைந்த டிஜிட்டல் உலகில், பயனாளர்களை கவர அவ்வப்போது புதிய அப்டேட்களை டெலிகிராம் செயலி வெளியிட்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில், டெலிகிராம் செயலி புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அதில், மெசேஜ் ரியாக்ஷன், மொழிபெயர்ப்பு, ரகசிய தகவல் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ரியாக்ஷன்

டெலிகிராம் பயனாளர்கள் இனி தனிப்பட்ட மெசேஜ்ஜிலும், குரூப் மெசேஜ்க்கும் ஸ்மைலி மூலம் ரியாக்ஷன் அனுப்பிட முடியும். ஆனால், குரூப்பில் அனுப்பிட அதன் அட்மின் அந்த ஆப்ஷனை ஆன் செய்திருக்க வேண்டும். வித்தியாசமான அனிமேஷனில் ஸ்மைலி ரியாக்ஷன் அனுப்பப்படுகிறது. இந்த வசதி ஏற்கனவே இன்ஸ்டாகிராம் தனிப்பட்ட மெசேஜ் மற்றும் பேஸ்புக் மெசேஞ்சரில் உள்ளது.

அதே சமயம், அனைத்து தனிப்பட்ட சாட்களுக்கும் ‘default’ Reactionஐ செட் செய்திட முடியும். ஆண்ட்ராய்டில், பயனர்கள் Chat Settings > Quick Reaction செல்ல வேண்டும். ஐஓஎஸ்-இல் Stickers and Emoji > Quick Reaction செல்ல வேண்டும்.

நீங்கள் ஸ்மைலி முடிவு செய்துவிட்டால், அவை தான் எல்லை மெசேஜ்க்கும் அனுப்பிட முடியும். தேவைபட்டால் மாற்றிக்கொள்ளலாம்.

மெசேஜ் மொழிபெயர்ப்பு

உங்கள் ஓஎஸ்-இல் மொழிபெயர்ப்பு சப்போட் ஆகும் பட்சத்தில், நீங்கள் எந்தவொரு மெசேஜ்ஜையும் உங்களுக்கு பிடித்தமான விருப்பமான மொழிக்கு மாற்றிட முடியும். இந்த வசதி அனைத்து ஆன்ட்ராய்டு பயணிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 15+ வெர்ஷன் உபயோகிக்கும் ஐஓஎஸ் டெலிகிராம் பயனாளர்களுக்கு மட்டும் தான் இந்த வசதி தற்போது கிடைக்கிறது.

இந்த வசதியை ஆன் செய்திட, முதலில் Settings> Language செல்ல வேண்டும். அதில், Translate buttonஐ ஆன் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு மொழியில் திறமையாக இருக்கும் பட்சத்தில், அதில் Translate button தோன்றாத வகையில் மாற்றம் செய்திட முடியும்.

ஸ்பாய்லர்கள்

ஸ்பாய்லர் என்கிற புதிய வசதி மூலம், மெசேஜ்ஜில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்து அனுப்பிட முடியும். அந்த மறைக்கப்பட்ட எழுத்துகள், நோட்டிப்பிகேஷன் பாரிலும், சாட் திரையில் பார்க்க முடியாது. சம்பந்தப்பட்ட நபரின் சாட்டை ஒப்பன் செய்து, அதனை கிளிக் செய்தால் மட்டுமே ஒரிஜினல் மெசேஜ்ஜை காண முடியும்.

தீம் QR குறியீடுகள்

பொதுவான பெயர்களை கொண்ட டெலிகிராம் பயனர்கள், தங்களுக்கேன QR குறியீடுகளை உருவாக்க முடியும். இது ஒருவரின் ப்ரொபைல் விரைவாக காட்சிப்படுத்துவதை எளிதாக்குகிறது. பயனர்கள் usernameக்கு அருகிலுள்ள QR code ஐகானை கிளிக் செய்து, நிறம் மற்றும் பேட்டனை தேர்வுசெய்யலாம். வேண்டுமானால், உங்களின் QR codeஐ மற்ற சமூக வலைதளங்களில் பகிர்துகொள்ளலாம். அதை கிளிக் செய்தால், உங்கள் ப்ரொபைலுக்கு வந்துவிடலாம்.

macOSக்கு புதிய மெனு

MacOS பதிப்பிற்கான அனைத்து மெனுக்களையும் டெலிகிராம் மறுவடிவமைப்பு செய்துள்ளது. மெனுவில் உள்ள ஐகான்களுக்கு அனிமேஷன் மற்றும் புதிய ,ஷாட்கட்கள் வசதிகளை வழங்கியுள்ளது.

Interactive Emojis

சில எமோஜிகளை Interactive வகையில் வடிவமைத்துள்ளனர். 🔥 😁 🤩 😢 😭 😱 ❄️ போன்றவற்றை நீங்கள் சாட்டில் அனுப்பிவிட்டு, கிளிக் செய்தால், ஃபூல் ஸ்கீரின் டிஸ்பிளே போன்ற அனிமேஷன்கள் வரக்கூடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Telegram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment