scorecardresearch

வாட்ஸ்அப்பை மிஞ்சும் டெலிகிராம்.. வந்தாச்சு புது அப்டேட்.. புதிய அம்சங்கள் என்ன?

Telegram update | டெலிகிராம் செயலி ஹிட்டன் மீடியா, ஜீரோ ஸ்டோரேஜ் போன்ற பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப்பை மிஞ்சும் டெலிகிராம்.. வந்தாச்சு புது அப்டேட்.. புதிய அம்சங்கள் என்ன?

New updates in Telegram | New storage option | வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக அதேபோன்று அம்சங்கள் கொண்ட டெலிகிராம் செயலி கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வாட்ஸ்அப் இன்ஸ்டன் மெஜிங் செயலியாகும். வாட்ஸ்அப் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான செயலி ஆகும். டெலிகிராம் இந்தியாவைச் சேர்ந்த செயலியாகும். டெலிகிராம் செயலியையும் பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பை மிஞ்சும் அளவிற்கு டெலிகிராம் தங்கள் பயனர்களுக்கு புது அப்டேட் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஸ்பாய்லர் எபெக்ட் (Spoiler effect) அதாவது ஹிட்டன் மீடியா (Hidden Media), ஜீரோ ஸ்டோரேஜ், நியூ டிராயிங் அண்ட் டெக்ஸ்ட் டூல் போன்ற புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஹிட்டன் மீடியா

ஹிட்டன் மீடியா அம்சம் மூலம் பயனர்கள் போட்டோ, வீடியோவை மறைத்து வைத்துக் கொள்ள முடியும். ஃபைலாக மறைத்துக் கொள்ளலாம். முன்னதாக, ஸ்பாய்லர் எபெக்ட் என்ற அம்சம் மெசேஜை மட்டுமே மறைத்து வைத்த நிலையில், ஹிட்டன் மீடியா
போட்டோ, வீடியோக்களை மறைத்து வைக்கும் அம்சமாக உள்ளது. டெலிகிராம் அட்டாச்மெண்ட் பயன்படுத்தி போட்டோ, வீடியோக்களை தேர்வு செய்து (Hide with spoiler) பயன்படுத்தி மறைத்து வைத்துக் கொள்ளலாம்.

ஜீரோ ஸ்டோரேஜ்

ஜீரோ ஸ்டோரேஜ் வசதி மூலம் போனில் டெலிட் செய்த போட்டோ, வீடியோக்களை நேரடியாக டெலிகிராம் மூலம் மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோர் சென்று டெலிகிராம் அப்டேட் கொடுத்து இந்த வசதியை பயன்படுத்தலாம்.

நியூ டிராயிங் அண்ட் டெக்ஸ்ட் டூல்

நியூ டிராயிங் அண்ட் டெக்ஸ்ட் டூல் அம்சம் மூலம் வேறு ஒருவருக்கு போட்டோ அனுப்புகிறீர்கள் என்றால் அதன் மீது எழுதலாம், வரையலாம். Background வசதியையும் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Telegram update here are the new features available for telegram