Telegram will now allow 1000 viewers in video calls Tamil News : டெலிகிராம் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில், பல புதிய அம்சங்களை பிளாட்பாரத்தில் கொண்டு வருகிறது. பயனர்கள் இப்போது 1000 பார்வையாளர்களுடன் க்ரூப் வீடியோ அழைப்புகளைச் செய்ய முடியும். இருப்பினும், 30 பயனர்கள் மட்டுமே அழைப்புகளில் பங்கேற்க முடியும். மீதமுள்ளவர்கள் அதைப் பார்க்க மட்டுமே முடியும். மேலும், வீடியோ செய்திகளை முன்பைவிட உயர் தரத்தில் பதிவு செய்ய அனுமதிக்கும் மற்றும் நீங்கள் வழக்கமான வீடியோக்களை 0.5 அல்லது 2x வேகத்தில் பார்க்க முடியும். ஒருவருக்கொருவர் அழைப்புகள் உட்பட அனைத்து வீடியோ அழைப்புகளுக்கும் ஒலியுடன் திரை பகிர்வு போன்ற அம்சங்களையும் தருகிறது.
க்ரூப் வீடியோ அழைப்புகள் 2.0-ஐ டெலிகிராம் அறிமுகப்படுத்துகிறது. இது, 30 பயனர்கள் தங்கள் கேமரா மற்றும் திரை இரண்டிலிருந்தும் வீடியோவை ஒளிபரப்ப அனுமதிக்கும் மற்றும் 1000 பேர் வரை இதில் சேர முடியும். பயனர்கள் அதிக தெளிவுத்திறனில் வீடியோ செய்திகளைப் பதிவு செய்ய முடியும். மேலும், ஒரு வீடியோ செய்தியை விரிவாக்க அதனை க்ளிக் செய்து, கூடுதல் பிக்சல்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.
டெலிகிராமில் உள்ள மீடியா பிளேயர் இப்போது பயனர்களை 0.5x, 1.5x மற்றும் 2x பிளேபேக் வேகத்தில் உள்ளடக்கத்தை இயக்க அனுமதிக்கும். மேலும், இந்த பயன்பாடு 0.2x வேகத்தையும் ஆதரிக்கிறது. ஒருவருக்கொருவர் அழைப்புகளைச் செய்யும் போது பயனர்கள் தங்கள் திரைகளைப் பகிர இந்த பிளாட்ஃபார்ம் இப்போது அனுமதிக்கும்.
செயலியில் உள்ள மீடியா எடிட்டர் இப்போது உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வரைபடங்கள், உரை மற்றும் ஸ்டிக்கர்களுடன் விளக்கவும் அலங்கரிக்கவும் அனுமதிக்கும். சிறந்த விவரங்களை எளிதாகச் சேர்க்க, நீங்கள் ஜூம் செய்யும்போது உங்கள் ப்ரஷ்ஷின் அகலம் குறையும்.
iOS சாதனங்கள் ஒரு புதிய கேமராவைப் பெறும். இதன் பொருள், பயன்பாட்டில் உள்ள கேமரா உங்கள் சாதனத்தில் உள்ள அனைத்து ஜூம் நிலைகளையும் பயன்படுத்தும் என்பதுதான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil