Asher Elbein
காங்கோவின் தாழ்வான பகுதியில் உள்ள, பூமியிலே ஆழமான ஆற்று பகுதிகளில் இருந்து ஒருவகை மீனை அப்பகுதியில் வாழும் மீனவர்கள், கடந்த 2007ம் ஆண்டு மெலானி ஸ்டெய்ஸ்னிக்கு கொண்டுவந்து கொடுத்தார்கள். அது 6 இன்ச் நீளமும், வெள்ளை நிறம் கொண்டதாவும், கண் இல்லாத நிலையிலும் இருந்தது. தண்ணீரில் இருந்து வெளியேறியவுடன் மீன்கள் இறந்துவிடுவது வழக்கம். ஆனால் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது என்னவெனில், அதை கொல்வது என்ன என்பதாகும்.
அதன் தோல் மற்றும் செவுள்களுக்கு அடியில் நைட்ரஜன் தோன்றியது என்று ஸ்டெய்ஸ்னி கூறுகிறார். இவர் நியூயார்க், இயற்கை வரலாற்று அமெரிக்கன் மீயூசியத்தில், மீனியல் நிபுணராக உள்ளார். இது தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் உணரும் ஒரு நிலையின் அறிகுறிபோல் தெரிகிறது. விலங்குகளுக்கு இதுபோன்ற நிலை அடிக்கடி ஏற்படும்போது, அவை இறக்கினறன. ஆனால் மனிதர்களுக்கு ரத்தத்தில் நைட்ரஜன்கள் உருவாகி, ஆழமான தண்ணீரில் அவர்கள் சென்று வெளியேறும்போது அது அவர்களை காக்கிறது.
காங்கோ நதி ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியில் 2,500 மைல் தொலைவு சுழன்று பாய்கிறது. வளைவுகளால் இறப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறுகிறார். எனில், இப்பகுதிகளில், தண்ணீரின் ஆழம் எவ்வளவு?
காங்கோ நதி ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியில் 2,500 மைல் தொலைவு ஜனநாயக காங்கோவின் காடுகளில் வளைந்து நெளிந்து செல்லும் ஒரு பாம்பை போல் சுழன்று பாய்கிறது. கடலில் இருந்து 186 மைல்களுக்கு முன்னால் அபாயகரமான மலை இடுக்குகளில் புகுந்து ஓடுகிறது. ஒவ்வொரு மைலுக்கும் இடையே 12 அடி பள்ளம் ஏற்படுகிறது. காங்கோவின் மத்திய மாகாணத்தில் சுழன்று செல்லும் நதியானது, காங்கோ குடியரசு மற்றும் அங்கோலாவிற்கு எல்லையாக உள்ளது. ஆற்றின் 30 சதவீத மீன்வளம் இங்கிருந்து பெறப்படுகிறது. இதனால் மீனியலாளர்களை ஈர்க்கும் இடமாகவும் உள்ளது.
ஸ்டெய்ஸ்னி காங்கோ திட்டத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். காங்கோ குடியரசின் மெரியன் நெகோபி பல்கலைக்கழகம் மற்றும் ஜனநாயக குடியரசு காங்கோவின் கின்ஷாஷா பல்கலைக்கழகம், அமெரிக்கன் மியூசியமும் இணைந்து நதியின் கீழ் உள்ள தனித்தன்மையான மீன்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அவர்களின் ஆராய்ச்சியை, உடல் புவியியல் யூனியனில் ஜனவரி மாதத்தில் வழங்கினர். மேலும் ஆற்றின் பரப்பு முன்பு கற்பனை செய்ததைவிட வினோதமாக உள்ளதாக தெரித்தனர். இதன் எதிர் நீரோட்டங்கள் மற்றும் ஆழம் 700 அடியை விட அதிகமானதாக இருந்தது. ஒன்றிணைந்த பரிணாமம் குறித்து ஆய்வுகள் நடத்துவதற்கு நம்பமுடியாத அளவுக்கு இயற்கை வளங்கள் உள்ள, இயற்கை குறித்து படிக்கும் ஆய்வகம் அளவிற்கு வளம் உள்ள இடமாகும். எவ்வாறு விதவிதமான உயிரினங்கள் ஒரே சுற்றுப்புற சூழலை ஏற்று வளர்கின்றன என்பதும் கேள்வியாகிறது.
மீன்கள் அழிவதில் இருந்துதான் இந்த ஆற்றின் ஆழம் பற்றிய குறிப்பு கிடைத்தது. மெரியன் நெகோபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்டர் மெமோநேகேனைப் பொறுத்தவரை அந்தப்பகுதியில் உள்ள புளு கிராமத்தில் நீண்ட நாட்களாக அந்த மீன் மாண்டேலி பீரோ அல்லது அலுவலகத்தில் உள்ள வெள்ளை மனிதன் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த புளு கிராமத்தில் தான் விஞ்ஞானிகள் அந்த மீன்களை முதலில் பார்த்தார்கள். அந்த உயிரினம் 1976ல் முதன்முதலாக சிசிலிட் என்று அழைக்கப்பட்டது. திலாப்பியா, ப்ளூகில், பீக்காக்பாஸ் வகை குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் அதன் உறவினர்களைவிட சிறிது வித்யாசமாக உள்ளது. மிகச்சிறிய அளவிலும், கண்களின்றியும், கேவ் மீன்களைப்போன்ற வெளிறிய நிறம் கொண்டதாகவும் உள்ளன.
இந்த மீன்கள் எங்கிருந்து வந்திருக்கும் என்பதை கண்டறிய காங்கோ திட்டம், தேசிய புவியியல் சமூகம் மற்றும் அமெரிக்க புவியியல் மையத்துடன் இணைந்து ஆராய்ச்சயில் ஈடுபட்டுள்ளதாக ஸ்டெய்ஸ்னி கூறுகிறார். 2008 மற்றும் 2009ம் ஆண்டு, தண்ணீரின் ஆழம் குறைந்த காலத்தில், ஒரு குழுவை அனுப்பி வைத்ததாக அவர் கூறுகிறார். அவர்கள் தங்கள் படகுகளில் ஆழத்தை அளக்கக்கூடிய கருவி, சத்தத்தை கேட்கக்கூடிய கருவி ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.
மலையிடுக்குகளில் ஓடிய நதிக்கு அருகில் செல்லமுடியவில்லை. மேலும் அது மாசடைந்திருந்தது. இது மிஸ்ஸிசிப்பி நதியைவிட 5 மடங்கு வேகமாக பாய்ந்து ஓடியது. குறிப்பாக இங்கு படகில் செல்ல முடியாது. இந்த கடினமான நீரோட்டத்தால், இங்குள்ள தண்ணீரில் வேலை செய்வது ஆபத்தானது என்று மெமோநேகேனே கூறுகிறார்.
அதிர்ஷ்டவசமாக படகில் சென்ற அனைவரும் திரும்பிவிட்டனர். அந்த குழு சேகரித்த தகவல்களின்படி, தண்ணீருக்குள் இருந்த நிலப்பரப்பு கடுமையானதாக இருந்தது. பெரிய பாறைகள் இருந்தன, வெற்று வண்டல் படிமங்கள் மற்றும் செடிகள் இருந்தன. அலை வேகமான நீரோட்டத்திற்கு ஏற்ப மேலும், கீழும் அசைந்தன. ஒரே இடத்தில் இரண்டு நதிகள் இருப்பதுபோல் இருந்தது என்று ஸ்டெய்ஸ்னி கூறுகிறார்.
அந்த சிக்கலான நீரோட்டம் மற்றும் அதன் சக்தியே, அப்பகுதியின் உயர்ந்த பல்லுயிர் பெருக்கத்திற்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார். இந்த எதிர்ப்பாற்றல் மிக்க சூழலே, அங்கு பல்வேறு வகையான மீன்கள் அதிகரிப்பதற்கு காரணம். மேலும் அவற்றை தனித்தனி தண்ணீர் பாக்கெட்களில் வளர்த்து பார்த்தோம். அது புதிய உயிரினங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.
பள்ளங்கள் அதிக ஆழமாக இருந்திருக்கக்கூடும், ஏனெனில் குழுவினர் கடலின் ஆழத்தை அளப்பதற்கு பயன்படுத்தும் கருவியை பயன்படுத்தினர். காங்கோ நதியின் சில இடங்களில் 720 அடி ஆழம் வரை இருந்தது. அது கடலின் டிவைலைட் சோன் அளவிற்கு ஆழமானதாக இருந்தது. செங்குத்தான பள்ளத்தாக்குகளில் உள்ள சுழல்களிலிருந்து தண்ணீர் மேலும், கீழும் விழுந்தது, தண்ணீருக்கு அடியில் உள்ள அருவிபோல் இருந்தது.
ஸ்டெய்ஸ்னியின் குழுவினர், மாண்டேலி பீரோ இந்த ஆழமான பள்ளப்பகுதிகளில் வசிக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அது நீரின் சுழல்களால் எப்போதாவது இழுக்கப்பட்டு, மலைகளில் மோதி வெளியே வரலாம் என்று கருதுகிறார்கள். தரையில் இருந்து 100 அடிக்குமேல் எழும்பி அவை வரலாம். அவற்றின் உடலில் நைட்ரஜன்கள் சுரக்காமல் இருக்கலாம். அவைகளை கொல்லும், அதே வளைவுகளே, அவற்றின் உணவை வழங்குவதும் ஆச்சர்யமே. அதன் சுவாசப்பையை வெடிக்கச்செய்து, குடலில் உள்ள பொருட்களை வெளியேற்றலாம்.
தண்ணீர் ஆழமுள்ள பகுதிகளில், சத்துக்கள் குறைவாக இருக்கும். மாண்டேலி பீரோவின் பசியை அது முடக்கும். எனவே இந்த உயிரினம் எப்போது உணவு கிடைக்குமோ அப்போது அதிகமாக சாப்பிட வேண்டும் என்று குழுவினரின் ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. இந்த நீரோட்டத்திற்கு உணவு எப்போதாவது மட்டுமே எடுத்துவரப்படும். அப்போது இவை நன்றாக சாப்பிட்டுக்கொள்ள வேண்டும் என்று ஸ்டெய்ஸ்னி கூறுகிறார்.
மாண்டேலி பீரோக்கள் அப்பகுதிகளில் உள்ள நீளமான வடிவம் கொண்ட, நிறமிகளை இழக்கக்கூடிய, கண்களை சுருகிக்கொள்ளக்கூடிய ஆறு வகை மீன்களில் ஒன்றாகும். மற்றவைகள், கேட்பிஷ், எலிபேண்ட் பிஷ், ஸ்பைனி ஈல்ஸ் போன்ற பல்வேறு குடும்பத்திலிருந்து வந்த வகைகளாகும். இவை கரையோரங்களில், ஆழம் குறைவான பகுதிகளில் காணப்படும்.
சம்மந்தமே இல்லாத உயிரனங்கள் சில நேரங்களில் ஒரேபோன்ற உடலமைப்பு கொண்டதாக இருப்பது ஒன்றிணைந்த பரிணாமம் என்றழைக்கப்படும். மீன்களில் சிலவகை உயிரினங்களும், சாலாமாண்டர்களும், வளர்சிதை மாற்றமடைந்து, கண்களை இழந்து, குகைகளில் வசிக்கும்.
இதுபோன்ற மாற்றங்கள் அதிசயமான சம்பவங்களாக அங்கீகரிக்கப்படும். விலங்குகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்தில் இது எவ்வாறு வேலை செய்கிறது என்பது குறித்து ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்க முயன்றுகொண்டே இருக்கின்றன. இதனால், இந்த திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது என்று டெக்சாஸ் ஏஎம் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த உயிரியலாளர் கிரிக் வைன்மில்லர் கூறுகிறார். இவர் இந்த திட்டத்துடன் நேரடி தொடர்பில்லாதவர்.
பிரச்னைகளுக்கு உகந்த தீர்வு கிடைத்துள்ளதுபோல் தெரிகிறது என்று அவர் கூறினார். மெலானியிள் வேலைகள், பல்வேறு உயிரினங்கள் அந்த சூழலில் பொருந்தி வாழ்வதை காண்பிக்கிறது. அடுத்தகட்டமாக ஸ்டெய்ஸ்னி, இந்த வகை மீன்கள் காங்கோவில் வேறு எங்கேனும் தென்படுகிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றின் உடற்கூறுகளை ஆய்வு செய்து, அதன் உறவினர்களா என்பதை கண்டறியலாம். அவர்கள் அந்த ஆற்றில் உள்ள கண் இல்லாத மற்ற மீன்களின் மரபணுக்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் மூலம் ஒரே மரபணுக்களை கொண்டதால், அவற்றால் அந்த நீரோட்டத்தில் வசிக்க முடிந்ததா என்பதை கண்டறிய முயல்கின்றன. மேமொனேகேனே பல கேள்விகளை விளக்கினார். எல்லாமே இந்த உயிரினம் குறித்து அறிவதாக இருந்தது. இந்த ஆராய்ச்சியை தொடரவேண்டும்.
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.