Advertisment

உஷார் மக்களே! அமெரிக்காவில் வழக்கு, ரூ.5 கோடி மோசடி: ஏ.ஐ ஃபேஸ் ஸ்வாப்பிங் தொழில்நுட்பத்தின் ஆபத்துகள்

ஃபன், விளையாட்டுகளுக்கு அப்பால் செயற்கை நுண்ணறிவின் ஃபேஸ் ஸ்வாப்பிங் தொழில்நுட்பத்தில் இருக்கும் ஆபத்துகள் அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Face AI.jpg

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரபலங்களின் புகைப்படங்களை வணிகரீதியாகப் பயன்படுத்தியதற்காக, ரீஃபேஸ் என்ற வைரல் ஃபேஸ்-ஸ்வாப்பிங் அப்ளிகேஷனுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரீஃபேஸ்  அப்ளிகேஷன் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி ஹைப்பர்-ரியலிஸ்டிக் ஃபேஸ் ஸ்வாப்களை உருவாக்குகிறது.  எந்தவொரு நபரின் முகத்தின் புகைப்படத்தையும் மற்றொரு நபரின் படம் அல்லது வீடியோவில் டிஜிட்டல் முறையில் மாற்றி பயன்படுத்த முடியும். ஆப் ஸ்டோர்களில் இதுபோன்ற பல செயலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. 

Advertisment

ஃபேஸ் ஸ்வாப்பிங் ஆப்ஸ் வேடிக்கையான அம்சமாக தெரிந்தாலும் ஆனால் இது பெரும் மோசடிக்கும் வழிவகுத்து.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய நண்பர் போல் ஆள்மாறாட்டம் செய்து 4.3 மில்லியன் யுவான் (சுமார் ரூ. 5 கோடி) மோசடி செய்தபோது இது பற்றிய  அச்சுறுத்தல்கள் வெளிப்பட்டன.

ஃபேஸ் ஸ்வாப்பிங் ஆபத்துகள்

1. தவறான தகவல்கள் 

ஏ.ஐ-ன் ஃபேஸ் ஸ்வாப்பிங் ஆப் மிக முக்கியமான ஆபத்துகளில் ஒன்று. இது தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புகிறது. இந்தப் பயன்பாடுகள் வீடியோக்களையும் படங்களையும் வெற்றிகரமாகக் கையாளுகின்றன மற்றும் உண்மையாக இருப்பது போன்ற தோற்றத்தை அச்சு அசலாக உருவாக்குகின்றன.

2. Access to sensitive data

மற்றவர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம், மோசடி செய்பவர்கள் முக்கியமான தரவுகளுக்கான அங்கீகாரமற்ற அணுகலை எளிதாகப் பெறலாம் மற்றும் பிறரின் அடையாளத்தைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்யலாம்.

3. சைபர்புல்லிங் மற்றும் துன்புறுத்தல் 

ஒரு நபரின் படம், வீடியோக்களை ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் சைபர் தாக்குதலுக்கு நேரிடும். அவர்கள் மோசடி நபர்களால் மிரட்டப்படுவார்கள். 

4. ஆபாசப் படங்கள்

மோசடி நபர்கள் ஏ,ஐ ஃபேஸ் ஸ்வாப் தொழில்நுட்பம் பயன்படுத்தி, ஆபாசப் படங்கள் உருவாக்கி உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 

இந்த ஆபத்துகள், AI ஃபேஸ் ஸ்வாப் தொழில்நுட்பத்தின் நெறிமுறை மற்றும் பொறுப்பான பயன்பாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, அத்துடன் அதன் எதிர்மறை தாக்கங்களைத் தணிக்க வலுவான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புகளின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. 

5. கட்டுபாடுகள் தேவை 

கட்டுப்பாட்டை இழத்தல்: சமூக ஊடக தளங்களில் AI ஃபேஸ் ஸ்வாப் பயன்பாடுகளுடன் படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்வது என்பது அந்த உள்ளடக்கத்தை மற்றவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் அல்லது தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான சில கட்டுப்பாட்டை கைவிடுவதாகும். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/artificial-intelligence/ai-face-swapping-technology-dangers-9003123/

அத்தகைய தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது மற்றும் உள்ளடக்கத்தில் இடம்பெறும் தனிநபர்களின் தனியுரிமை மற்றும் ஒப்புதலுக்கு மதிப்பளிப்பது மிகவும் முக்கியமான தாகும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Artificial Intelligence
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment