Who is Sridhar Ramaswamy | ஸ்ரீதர் ராமசாமி அமெரிக்க நிறுவனமான ஸ்னோஃப்ளேக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நிறுவனத்தில் நீண்ட கால சிஇஓ (CEO) ஆக இருந்த ஃபிராங்க் ஸ்லோட்மேன் பிப்.27,2024 அன்று நீக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏ.ஐ இயங்கும் தேடுபொறியான நீவாவை நிறுவனம் கையகப்படுத்தியதன் மூலம் ராமசாமி ஸ்னோஃப்ளேக்கில் சேர்ந்தார்.
ஸ்ரீதர் ராமசுவாமி 1967இல் தமிழ்நாட்டில் பிறந்தார். இவர், 1989இல் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு, முனைவர் பட்டம் பெற்றார்.
அவரது லிங்டுஇன் (LinkedIn) சுயவிவரத்தின்படி, “பிரவுன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் மற்றும் ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியலில் பி.டெக் (B.Tech) பட்டம் பெற்றுள்ளார்” என்று தெரிகிறது.
ஸ்ரீதர் ராமசுவாமி 2019 இல் நீவா-வின் துணை நிறுவனர் ஆக இருந்தார். இவரின் பயணம் சென்னையில் தொடங்கியது. இந்த நிலையில், இது 2023 இல் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டேட்டா கிளவுட் நிறுவனமான ஸ்னோஃப்ளேக்கால் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, ஸ்னோஃப்ளேக்கில் AI இன் மூத்த துணைத் தலைவராக ராமசாமி பணியாற்றினார்.
மே 2023 இல் ஸ்னோஃப்ளேக்கில் இணைந்ததில் இருந்து, ராமசாமி ஸ்னோஃப்ளேக்கின் AI உத்தியை முன்னெடுத்துச் செல்கிறார்.
ராமசாமி கூகுளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார், அங்கு அவர் ஒரு மென்பொருள் பொறியாளராகத் தொடங்கி விளம்பரங்கள் மற்றும் வர்த்தகத்தின் மூத்த துணைத் தலைவராக (SVP) உயர்ந்தார். அவர் பெல் லேப்ஸ், லூசண்ட் டெக்னாலஜிஸ் மற்றும் பெல் கம்யூனிகேஷன்ஸ் ரிசர்ச் (பெல்கோர்) ஆகியவற்றிலும் ஆராய்ச்சிப் பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“