இந்த நூற்றாண்டில் நடைபெற இருக்கும் மிக நீளமான சந்திர கிரகணம் வருகின்ற ஜூலை 27ம் தேதி நடைபெற இருக்கின்றது. முதலில் ஒரு முழுச் சந்திர கிரகணமும், அதன் பின்னர் அரை சந்திரகிரகணமும் நடைபெற உள்ளது.
இரண்டு சந்திர கிரகண நிகழ்வுகளும் முடிய நான்கு மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த அரிய நிகழ்வினை உலகில் இருக்கும் அனைத்து மக்களாலும் காண இயலாது. இரண்டு சந்திர கிரகணங்களையும் இந்தியாவில் இருப்பவர்களால் காண இயலும்.
தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் கிழக்காசிய நாடுகளில் இருக்கும் மக்களாலும் இந்த சந்திர கிரகணங்களை காண இயலும்.
இந்த பிளட் மூன், உலகின் கிழக்கு அரைக்கோளத்தில் மட்டுமே தெரியும். வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக்-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளவர்கள் இந்த நிகழ்வைப் பார்க்க முடியாது.
செந்நிற நிலவு என அழைக்கப்படும் பிளட் மூன் சுமார் நான்கு நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று நாசா ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருக்கிறது.
செந்நிற நிலவினை எப்போது பார்ப்பது?
செந்நிற நிலவு, சந்திர கிரகணத்தின் தொடக்கித்திலேயே தோன்றும் என்பதால், இரவு 11.54 மணி அளவில் அதை காண இயலும். முழு சந்திர கிரகணம் ஜூலை 28ம் தேதி காலை 1.00 மணி அளவில் தொடங்கும். அதிகாலை நான்கு மணி வரை இந்த சந்திர கிரகணம் தொடங்கும் என்றும் அறிவித்திருக்கிறது நாசா.
இதில் வருத்தப்பட என்ன இருக்கின்றது என்றால், ஜூலை 27ம் தேதி அன்று நிலவு பூமியில் இருந்து மிக தொலைவில் சுற்றிவரும். இந்த வருடத்தில் தோன்றும் மிகச் சிறிய பௌர்ணமி நிலவும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவப்பு நிறத்தில் நிலவு தோன்ற காரணம் என்ன?
சந்திர கிரகணம் நடக்கின்ற நேரத்தில், பூமியின் நிழலானது, நிலவின் மீதுபடும். அதனால் தான் மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றம் அடைகிறது.
நிலவினை வெறும் கண்களால் பாதிப்பதால் எந்த வித ஆபத்தும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.