நிலவு பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகம் அளவிலான பொருள் மோதியபோது வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் பொதுவாக ஒரு முழு நிலவு தோற்றும், அதாவது பௌர்ணமி வரும். அது, நிலவு அதன் அனைத்து கட்டங்களையும் கடந்து செல்ல சுமார் 29.5 நாட்கள் ஆகிறது. இங்கு நிலவு பற்றி நாம் இதுவரை அறியா உண்மைகளைப் பார்க்கலாம்.
நிலவில் மனித சாம்பல்
சந்திரனில் உள்ள 200 டன் குப்பைகளில் பெரும்பாலானவை விண்வெளி கழிவுகள் ஆகும். எபிமெரா விண்கலம் மோதி உடைந்தது மற்றும் 1969 முதல் நிலவுக்கு வந்த விண்வெளி வீரர்கள் விட்டுச் சென்றதாகும்.
விண்வெளி கழிவுகளில் செயற்கைக் கோள் பாகங்கள், ராக்கெட்டுகள், கேமராக்கள், பைகள், மற்றும் கோல்ஃப் பந்துகள் ஆகியவை அடங்கும். அதோடு இங்கு கிரக அறிவியல் துறையின் நிறுவனர்களில் ஒருவரான யூஜின் ஷூமேக்கரின் சாம்பல் உள்ளது, இது 1998-ல் நாசாவால் அனுப்பபட்ட பாலிகார்பனேட் காப்ஸ்யூலில் வைத்து அனுப்பப்பட்டது.
நிலவு மறைகிறது
துரதிர்ஷ்டவசமாக, இந்த நிலவு உண்மை ஒரு கட்டுக்கதை அல்ல. ஒவ்வொரு ஆண்டும், சந்திரனின் சுற்றுப்பாதை பூமியிலிருந்து நான்கு சென்டிமீட்டர் தொலைவில் நகர்கிறது, அதாவது வெறும் 500 மில்லியன் ஆண்டுகளில், சந்திரன் இப்போது இருப்பதை விட 14,600 மைல் தொலைவில் செல்லும்.
நிலவில் கால்தடங்கள்
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மனிதன் நிலவில் கால் பதிக்கவில்லை. இருப்பினும் அதில் இன்னும் கால்தடங்கள் உள்ளன. இது வேற்றுகிரகவாசிகளின் வடிவத்திற்கு ஆதாரமா? இல்லை, அவை விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் மட்டுமே. சந்திரனில் காற்று இல்லாததால் இந்த கால்தடங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகள் நீடிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“