Gadgets that could make your life easy while travelling (Express Photo)
பயணம் யாருக்கு தான் பிடிக்காது. சும்மா 2 நாட்கள் லீவு கிடைத்தாலே எங்காவது போய் வர வேண்டும் என்று விரும்புவோம். உடலுக்கும், மனதிற்கும் மகிழ்ச்சியை தரும். அவ்வகையில் அலுவலக ரீதியாகவோ, நண்பர்கள், உறவினர்களுடன் பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். இப்படி பயணம் செய்யும் போது நமக்கு சில பொருட்கள் கட்டாயம் தேவைப்படும். குறிப்பாக கேஜெட்டுகள். அந்த வகையில் பயணத்தில் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும் கேஜெட்டுகள் குறித்து இங்கு பார்ப்போம்.
Advertisment
Noise-cancelling headphones
ஹெட்ஃபோன்கள், பயணங்களில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். அதிலும் குறிப்பாக சர்வதேச பயணங்களில் நீண்ட நேர விமானப் பயணத்தின் போது உற்ற நண்பன், தோழியாகவே இது இருக்கும். இசை நம் வாழ்க்கையில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் Sony WH-1000XM5, Bose QuietComfort 45, AirPods Max போன்ற ஹெட்ஃபோன்கள் நீண்ட தூர பயணங்களில் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும். இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், Noise-cancellation வசதி கொண்ட ஹெட்ஃபோன்கள் நிறைய உள்ளன.
Sony WH-1000XM5 headphones (Express Photo)
Advertisment
Advertisements
ப்ளூடூத் டிரான்ஸ்மிட்டர் ( Bluetooth Transmitter)
ப்ளூடூத் டிரான்ஸ்மிட்டர் உங்கள் வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு அமைப்புடன் இணைக்க அனுமதிக்கிறது. 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் கொண்ட ப்ளூடூத் டிரான்ஸ்மிட்டரை அமேசானில் ரூ.1,000க்கும் குறைவான விலையில் பெறலாம். மியூஸோனிக் ப்ளூடூத் ஆடியோ ரிசீவர், பகாரியா 2, சவுன்ஸ், ப்ளூடூத் ரிசீவர் போன்றவை மிகவும் பிரபலமான ப்ளூடூத் டிரான்ஸ்மிட்டர்களில் ஒன்றாகும். பயனர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
Fast-charging power bank
பவர் பேங்க் இதுவும் பயணத்தின் போது அவசியம் தேவைப்படும் பொருளாகும். அதுவும் ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்காக இருந்தாலும் கூடுதல் வசதியாக இருக்கும். சாதாரண பவர் பேங்கிற்குப் பதிலாக, Mi 50W பவர் பேங்க், ஆம்ப்ரேன் 100W பவர் பேங்க் அல்லது ஸ்டஃப்கூல் சூப்பர் 85W பவர் பேங்க் போன்ற வேகமாக சார்ஜ் செய்யும் பவர் பேங்க்களைப் பயன்படுத்தலாம். இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஃபோன்களை வேகமாக சார்ஜ் செய்ய முடியும் மற்றும் USB-PD தரநிலைகளை ஆதரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட லேப்டாப்களையும் சார்ஜ் செய்ய முடியும்.
The URBN 10,000mAh power bank (Express Photo)
ட்ராக்கிங் டிவைஸ் (Tracking device)
ட்ராக்கிங் டிவைஸ் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் செக்-இன் பொருட்களை எல்லா நேரங்களிலும் கண்காணிக்கலாம். ஐபோன் பயனர்கள் ஏர்டேக் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் டைல் டிராக்கர் (Tile Tracker) அல்லது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் டேக் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது நீடித்த பேட்டரி லைவ் மற்றும் ரிமோட் டிராக்கிங்கை வழங்குகிறது.