/tamil-ie/media/media_files/uploads/2023/01/Reliance-Jio-True-5G.jpg)
இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க தொடங்கின. முதலில் மெட்ரோ நகரங்களில் தொடங்கி தற்போது படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கு சேவையை விரிவுபடுத்தி வருகின்றன. அதில் குறிப்பாக ஜியோ நிறுவனம் பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் சேவையை வழங்கியுள்ளது.
ஜியோ நிறுவனம் ஜியோ ட்ரூ 5ஜி என்ற பெயரில் 5ஜி சேவைகளை வழங்கி வருகிறது. ஏர்டெல், ஏர்டெல் 5ஜி பிளஸ் என்ற பெயரில் சேவை வழங்குகிறது. அதிலும் ஜியோ standalone தொழில்நுட்ப முறையில் 5ஜி வழங்கிறது. இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை வழங்க வேண்டும் என ஜியோ திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், நேற்று (ஜனவரி 17) தமிழ்நாட்டின் திருப்பூர் உள்பட 16 புதிய நகரங்களில் ஜியோ தனது 5ஜி சேவை தொடங்கியுள்ளது. 7 மாநிலங்களில் 16 நகரங்களில் நேற்று சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர், ஆந்திரா மாநிலத்தில் காக்கிநாடா, கர்னூல் நகரங்களில், அசாமில் சில்சார், கர்நாடக மாநிலத்தில் ஷிவமொக்கா, தாவணகெரே, ஹோஸ்பேட், பிதார், கடக்-பேத்தகிரி, கேரளாவில் கன்னூர், கோட்டயம், பாலக்காடு நகரங்களிலும், தெலங்கானாவில் கம்மம், நிஜாமாபாத், உத்தரப்பிரதேசத்தில் பரேலி உள்ளிட்ட நகரங்களில் நேற்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜியோ மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட முந்தியுள்ளது. ஜியோ மொத்தம் 134 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. ஜியோ தனது Welcome Offer மூலம் சேவைகளை வழங்கிறது.
அதன்படி, 1 Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவைகள் வழங்கப்படுகிறது. ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும் நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு Jio's Welcome Offer பெறுவதற்கான இணைப்பு அனுப்பப்படும். தங்களது 4ஜி ரிசார்ஜ் உடன் கூடுதல் கட்டணம் ஏதுமின்று இலவசமாக 5ஜி சேவைகளைப் பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.