வின்லேட்டர் என்ற ஆப் மூலம் ஆண்ட்ராய்டு போனில் விண்டோஸ் ஓ.எஸ் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஆப் பெரியதான விண்டோஸ் ஓ.எஸ்ஸை கூகுள் ஓ.எஸ்ஸில் பயன்படுத்த அனுமதிக்கிறது.
ஏற்கனவே உள்ள ஆப்ஸ் மற்றும் டூல்களின் தொகுப்பை இணைத்து ஆண்ட்ராய்டில் Box (x86 ஆப்ஸை இயக்க உதவும் கருவி) மற்றும் Wine (Linux இல் Windows ஆப்ஸை இயக்க உதவும் மென்பொருள்) போன்ற கருவிகளை இயக்க வின்லேட்டர் ஒரு எளிய வழியை வழங்குகிறது. .
வின்லேட்டர் ஆனது APK மற்றும் OBB ஃபைல்ஸ் மூலம் எளிதாக ஆண்ட்ராய்டில் விண்டோஸை துவக்க உதவுகிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இந்த ஆப் எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது குறித்து பார்ப்போம்.
- GitHub-ல் இருந்து APK and OBB இமேஜ் ஃபைல்களை போனில் டவுன்லோடு செய்யவும்.
- APK ஃபைல்களை இன்ஸ்டால் செய்யவும். பின்னர் சிறிது நேரம் டேப்- க்ளோஸ் செய்யவும்.
- file manager பக்கம் சென்று டவுன்லோடு செய்த OBB இமேஜை copy செய்யவும். Android/OBB folder பக்கம் சென்று இந்த ஃபைல்களை பேஸ்ட் செய்யவும்.
- வின்லேட்டர் ஆப் ஓபன் செய்து OBB இமேஜ் ஃபைல்களை இன்ஸ்டால் செய்யவும்.
- இப்போது விண்டோஸ் கேம்ஸ் மற்றும் ஆப்களை ரன் செய்ய கண்டெய்னர் கிரியேட் செய்யலாம். ஸ்னாப்டிராகன் ப்ராஸசராக இருந்தால் எதுவும் செய்யத் தேவையில்லை. மாலி ஜிபியு இருந்தால் ரெண்டரரை VirGl ஆக மாற்றவும். பின்னர் “Create Container” கொடுக்கவும்.
அவ்வளவு தான் இப்போது ஆப் இன்ஸ்டால் ஆகவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“