விமான லைசென்ஸ் தேவையில்லை... உலகின் முதல் லைட் வெயிட் பறக்கும் கார் அறிமுகம்!

அமெரிக்காவை சேர்ந்த பிவோட்டல் நிறுவனம், நெரிசலான நகரங்களில் பயன்படுத்தப்படும் எதிர்கால டாக்ஸிகளாக பார்க்கப்படாமல், தனிநபர் பயன்பாட்டிற்கான வித்தியாசமான பறக்கும் வாகனத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிவோட்டல் நிறுவனம், நெரிசலான நகரங்களில் பயன்படுத்தப்படும் எதிர்கால டாக்ஸிகளாக பார்க்கப்படாமல், தனிநபர் பயன்பாட்டிற்கான வித்தியாசமான பறக்கும் வாகனத்தை உருவாக்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
pivotal flying car

விமான லைசென்ஸ் தேவையில்லை... உலகின் முதல் லைட் வெயிட் பறக்கும் கார் அறிமுகம்!

பறக்கும் கார்கள் (Flying Cars) இனி கனவல்ல. இன்று, எலெக்ட்ரிக் செங்குத்தாக பறக்கும் மற்றும் தரையிறங்கும் விமானங்கள் அல்லது eVTOL-கள் (Electric Vertical Takeoff and Landing Aircraft), நெரிசல் மிகுந்த நகரங்களுக்கு மேல் மக்களை உடனடியாகக் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்ட எதிர்கால டாக்ஸிகளாகவே பார்க்கப்படுகின்றன. eVTOL-களை உருவாக்கும் பல நிறுவனங்களில், அமெரிக்க விமானப் போக்குவரத்து ஸ்டார்ட் அப் நிறுவனமான பிவோட்டல் (Pivotal), வித்தியாசமான உத்தியைக் கையாண்டு வருகிறது.

Advertisment

இந்நிறுவனம், ஒரு இருக்கை கொண்ட, பொழுதுபோக்கு பயன்பாட்டிற்கான eVTOL-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிறிய பறக்கும் கார், மேலும் இது சந்தையில் உள்ள பல உயர்தர மோட்டார் சைக்கிள்களை விடவும் லேசானது. இதன் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, இதை ஓட்ட விமானி உரிமம் (Pilot License) தேவையில்லை என்பதே ஆகும். பிவோட்டலின் eVTOL, எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் 254 பவுண்ட் எடை கொண்டது. அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) விதிகளின் கீழ், இந்த விமானம் அல்ட்ரா-லைட் வாகனம் (Ultra-Light Vehicle) என வகைப்படுத்தப்படுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்த வகைப்பாடு வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நிறுவனம் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்துள்ளது. ஏனெனில், இது கடுமையான வணிக விமானப் போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் சாத்தியமில்லாத வேகத்தில், புதிய வடிவமைப்புகளை உருவாக்கவும், சோதிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் (iterate) அனுமதிக்கிறது.

பிவோட்டலின் eVTOL என்றால் என்ன?

பாரம்பரிய விமானங்கள் அவற்றின் இறக்கைகள் மூலம் லிஃப்ட் உருவாக்க ஓடுபாதை வேகத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், eVTOL-கள் ஹெலிகாப்டரைப் போலவே, ரோட்டர்களில் இருந்து வரும் செங்குத்து உந்துதலைப் பயன்படுத்தி நேராக மேலே எழும்புகின்றன. இருப்பினும், ஹெலிகாப்டர்கள் போலல்லாமல், eVTOL-கள் ரோட்டரை மட்டுமே நம்பியிருக்கின்றன. பிவோட்டலின் விமானத்தை பொறுத்தவரை, இது 8 மின்சார ப்ரொப்பல்லர்களைப் பயன்படுத்துகிறது. ஒரு ப்ரொப்பல்லர் செயலிழந்தாலும் விமானம் தொடர்ந்து பறக்கும் என்று அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Advertisment
Advertisements

இதன் வடிவமைப்பு எளிமையானது, ஆனால் புத்திசாலித்தனமானது. காற்றில் மேலே சென்றவுடன், அது முன்னோக்கி சாய்ந்து, மணிக்கு 63 mph (சுமார் 100 kmph) வரையிலான கிடைமட்ட வேகத்தில் பறக்கிறது. இதனால் நகரும் பாகங்களின் எண்ணிக்கை குறைந்து, பராமரிப்பு செலவுகள் குறைவாக இருக்கும்.

விமானக் கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை, விமானி ஒற்றை ஜாய்ஸ்டிக் (Joystick) மற்றும் கட்டைவிரல் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துகிறார். மேலும், பிவோட்டலின் சாப்ட்வேர் டேக்-ஆஃப் (Takeoff) மற்றும் தரையிறக்கத்தை (Landing) தானியங்குபடுத்துகிறது. இந்தச் சிறிய விமானத்தில் காற்று அழுத்தம், காற்றின் வேகம் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கும் பல சென்சார்கள் உள்ளன, இது பலத்த காற்றின் போதும் விமானத்தை நிலையாக வைத்திருக்கிறது. இந்த வாகனத்தை வாங்குபவர் யாரும் விமானத்தில் பறப்பதற்கு முன், சிமுலேட்டர் அமர்வுகள் உட்பட 2 வார பயிற்சித் திட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள வரம்புகள் என்ன?

FAA-வின் 115 கிலோகிராம் எடை வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பதற்காக, நிறுவனம் பேட்டரி திறன், உள்ளமைக்கப்பட்ட சாதனங்களை குறைக்க வேண்டியுள்ளது. இதன் விளைவாக, விமானிகளுக்குப் பொதுவாக வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள், விளக்கு அமைப்புகள், தகவல் தொடர்பு ரேடியோ மற்றும் பிற 2-ம் நிலை பாதுகாப்பு நடவடிக்கைகள் இதில் இல்லை.

இதனால், விமானத்தின் பயண நேரம் சுமார் 20 நிமிடங்கள், அல்லது சுமார் 20 மைல்கள் (32 கிலோமீட்டர்கள்) என வரம்புக்குட்படுகிறது. குறுகிய பயணங்களுக்கு இது போதுமானதாக இருந்தாலும், இது நிஜ உலகப் போக்குவரத்து அல்லது அவசரகால வாகனமாக இதன் பயன்பாட்டை வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது.

மேலும், அல்ட்ராலைட் விதிகளின்படி, மக்கள் நெரிசலான பகுதிகளுக்கு மேல் பறப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இது பெரும்பாலான நகரங்கள் மற்றும் டவுன்களுக்கு மேல் இயங்குவதைத் தடை செய்கிறது. இந்த குறைபாடுகள் இருந்தபோதிலும், பிவோட்டல் நிறுவனம், பொழுதுபோக்கு விமானங்களை விற்பது மட்டுமல்ல, திறம்பட அளவிடக்கூடிய தளத்தை (scalable platform) மேம்படுத்துவதே தங்கள் நோக்கம் என்று கூறுகிறது.

மோட்டார் அமைப்பு, சென்சார்கள் மற்றும் விமானக் கணினிகள் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்பங்கள், எதிர்காலத்தில் பெரிய, FAA- சான்றளிக்கப்பட்ட பதிப்பாக மாற்றப்பட்டு, அதிக வரம்பு மற்றும் அதிக பேலோட் (Payload) திறனுடன் உருவாக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் பாதுகாப்பு தளவாடங்களுக்கான (Defence Logistics) கலப்பின உந்துவிசையையும் (hybrid propulsion) ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் 2000 பவுண்டுகளுக்கு (900 கிலோகிராம்) மேல் 300 மைல்கள் (480 கிலோமீட்டர்கள்) தூரம் கொண்டு செல்லக் கூடிய விமானங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்குகள் இன்னும் பல ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும், இன்றைய அல்ட்ராலைட்டைச் செம்மைப்படுத்துவதுதான், நாளைய வணிகப் பறக்கும் இயந்திரங்களைத் திறப்பதற்கான திறவுகோல் என்று நிறுவனம் நம்புகிறது.

தற்போதுள்ள நிலையில், பிவோட்டலின் eVTOL கார்கள், ஹெலிகாப்டர்கள் அல்லது சிறிய விமானங்களுக்கு மாற்றாக இல்லை. இருப்பினும், ஒரு தனிப்பட்ட விமான வாகனமாக, சுமார் ரூ.1.6 கோடி (தோராயமாக $190,000) என்ற விலையில் தொடங்கி, இது வித்தியாசமான விமானப் பயண லட்சியத்தை நமக்குக் காட்டுகிறது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: