Advertisment

ஃபார்முலா 1 பந்தய கார்களுக்கு இணையான “டச்சில்” புகாட்டியின் புதிய கார்!

எடை இலகுவாக இருந்தாலும் மணிக்கு அசால்ட்டாக 500 கி.மீ பறக்குமாம் இந்த கார்...

author-image
WebDesk
Oct 29, 2020 14:31 IST
This new lightweight Bugatti hypercar can top 500 kmph

Bugatti Bolide :  பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்படும் லக்ஸூரி கார் வகைகளில் முக்கியமான ஒன்று புகாட்டியாகும். 1,800 குதிரைத்திறன் கொண்ட புகாட்டியின் பொலைட் கார் புதன்கிழமை அன்று அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் இலகுவான கார் ஆனால் உலகிலேயே மிகவும் வேகமாக இயங்கும் கார் இது என்று அறிமுகம் செய்து வைத்துள்ளது புகாட்டி நிறுவனம்.

Advertisment

ஃபார்முலா 1 பந்தையங்களுக்கு செல்லும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான சிறப்பம்சங்களுடன் இந்த கார் வடிமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இக்காரில் எஞ்சின் 16 சிலிண்டர்களை கொண்டுள்ளது. இதன் மொத்த எடையோ 1,240 கிலோ கிராம் தான். இதில் ஹைலட் என்பது ஒரு மணி நேரத்திற்கு 500 கி.மீ அசால்ட்டாக கடக்கும் என்பது தான்.

இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து ஸ்கூருக்கள் மற்றும் ஃபாஸ்டினிங் எலெமெண்ட்கள் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ஹாலோவில் ஏரோஸ்பேஸ் டைட்டானியம் அல்லாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலகுவான காராக அறிமுகம் செய்வதற்காக ஆக்ஸிலரி ட்ரைவ் ஷாஃப்ட்கள் உயர் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட அல்ட்ரா ஷிஃப்ட் கார்பன் இழைகளையும் 3டி ப்ரிண்ட் செய்யப்பட்ட டைனியத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Automobile
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment