டிப்ஸ், ஹேக்ஸ்: த்ரெட்ஸ் செயலியில் உள்ள இந்த 6 அம்சங்களை கவனிங்க

த்ரெட்ஸ் செயலி பயன்படுத்த சில டிப்ஸ், ஹேக்ஸ். இந்த 6 அம்சங்களை அதில் கவனித்துப் பாருங்க.

த்ரெட்ஸ் செயலி பயன்படுத்த சில டிப்ஸ், ஹேக்ஸ். இந்த 6 அம்சங்களை அதில் கவனித்துப் பாருங்க.

author-image
WebDesk
New Update
Threads

Meta's Threads

ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் செயலியை அண்மையில் அறிமுகப்படுத்தியது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் குழுவினர் இந்த செயலியை உருவாக்கினர், செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே மில்லியன் கணக்காண பயனர்களை பெற்றது. இதற்கு மிகந்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இதில் உள்ள 6 முக்கிய அம்சங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

ப்ரைவேட் பிரொபைல்

Advertisment

இயல்பாக உங்கள் பிரொபைல் அனைவருக்கும் தெரியும் படி பப்ளிக் ஆக வைக்கப்பட்டிருக்கும். யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். ஆனால் வேண்டும் என்றால் நீங்கள் இந்த ஆப்ஷனை மாற்றிக் கொள்ளலாம். ப்ரைவேட் பிரொபைல் செட் செய்து கொள்ளலாம். உங்களை பின் தொடர்பவர்கள் மட்டும் உங்கள் போஸ்டை பார்க்க முடியும்.

செட்டிங்க்ஸ் > ப்ரைவசி > private profile என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

publive-image

யார் ரிப்ளை செய்ய வேண்டும்

உங்கள் பதிவிற்கு யார் ரிப்ளை ( reply)செய்ய வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இதை பயன்படுத்த த்ரெட்ஸ் செயலியில் நீங்கள் போஸ்ட் செய்யும் போது, கீழே இடப்புறத்தில் கிளிக் செய்தால் “anyone can reply” ,
select mention only or the profiles you follow என்ற 3 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பதிவை யார் எல்லாம் பார்க்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தலாம்.

Advertisment
Advertisements
publive-image

Report, hide, and mute unwanted accounts

த்ரெட்ஸ் இப்போது டைம்லைன் அம்சங்களை வழங்குகிறது. இதில் நீங்கள் பின்தொடர்பவர்கள், ட்ரெண்டிங் கிரியோட்டர்களின் பதிவைப் பார்க்கலாம். அவ்வாறு உங்களுக்கு irrelevant-ஆன பதிவுகள் வந்தால் அந்த ஐ.டி-யை ப்ளாக் செய்யலாம். அல்லது அந்த குறிப்பிட்ட பதிவை hide செய்யலாம். அல்லது அந்த ஐடியை மியூட் செய்து வைக்கலாம்.

இதற்கு அந்த பதிவில் மேலே உள்ள 3 புள்ளி ஐகானை கிளிக் செய்து, உங்கள் விருப்பமான ஆப்ஷனை கிளிக் செய்யலாம்.

publive-image

தவறான வார்த்தைகள்

Hide offensive words and phrases த்ரெட்ஸ் செயலி தவறான வார்த்தைகள் மற்றும் சொற்களை கண்டறிந்தால் அந்தப் பதிவை தானாகவே நீக்கி விடும். அதே போல உங்களுக்கு யாரேனும் தவறான வார்த்தைகள் மற்றும் சொற்களை கொண்டு மெசேஜ், பதிவு அனுப்பினால் அதை நீங்கள் தடுக்கலாம். இதன் மூலம் செயலி இன்னும் பாதுகாப்பானதாக ஆகிறது.

செட்டிங்க்ஸ் > ப்ரைவசி > Hidden words > custom offensive words and phrases ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் offensive வார்த்தைகள், சொற்கள் பதிவு செய்து அதை ப்ளாக் செய்யலாம்.

publive-image

Manage notification

உங்களுக்கு வரும் த்ரெட்ஸ் நோட்டிவிக்கேஷன்களை நீங்கள் மேனேஜ் செய்யலாம். புஷ் நோட்டிவிக்கேஷன்களை மேனேஜ் செய்யலாம். நீங்கள் ஒரு காலக்கெடுவை அமைக்கலாம், அங்கு, அனைத்து அறிவிப்புகளும் 15/30 நிமிடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். த்ரெட்களில் இருந்து எந்த வகையான அறிவிப்புகளைப் பெற விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

publive-image

Take a break from Threads

த்ரெட்ஸ் செயலியை டிஆக்டிவேட் செய்தால் உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ம் டிஆக்டிவேட் ஆகிவிடும். அதனால் நீங்கள் த்ரெட்ஸ் செயலியில் இருந்து ப்ரேக் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு, செட்டிங்க்ஸ்> அக்கவுண்ட்> Take a break ஆப்ஷன் கொடுத்து ரிமைண்டர் ஆப்ஷன் கொடுத்து த்ரெட்ஸில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ளலாம்.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Meta

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: