எலான் மஸ்க்கின் ட்விட்டர் ('X') தளத்திற்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் செயலியை அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் பயனர்களைப் பெற்று அமோக வரவேற்பு பெற்றது.
இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக லாக்கின் செய்து பயன்படுத்தலாம் என்பதால் பலரும் இந்த செயலியை பயன்படுத்த
தொடங்கினர். சமீபத்தில் த்ரெட்ஸ் வெப் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. ட்விட்டருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் த்ரெட்ஸ் இன்னும் பல வசதிகளைப் பெற வில்லை.
இந்நிலையில் தற்போது ரீ போஸ்ட்டிங், கமெண்ட் செய்ய ஏதுவாக Quote போஸ்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி வெப் வெர்ஷனிலும் அறிமுகம் ஆகி உள்ளது. இதன் மூலம் ட்விட்டருக்கு ஒரு படி நெருக்கி வருகிறது.
எப்படி பயன்படுத்துவது?
1. முதலில் நீங்கள் எந்தப் பதிவை Quote செய்ய வேண்டும் என்பதை தேடி செலக்ட் செய்யவும்.
2. இப்போது ஏரோ ஐகானை கிளிக் செய்யவும்.
3. இப்போது ஒரு மெனு வரும் அதன் பின் Quote என்ற ஆப்ஷன் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்யவும்.
4. இப்போது முந்தைய பதிவுக்கு ஏற்ற கமெண்டை பதிவு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“