ககன்யான் திட்டம் : இந்த வருடம் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் நரேந்திர மோடி இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு ஆராய்ச்சியாளர்களை அனுப்புவது தொடர்பாக பேசினார்.
ககன்யான் திட்டம் ஒரு பார்வை
ககன்யான் திட்டம் குறித்தும், சந்திராயன் செயற்கோள் 2 குறித்தும் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள் அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேத்திர சிங் மற்றும் இஸ்ரோவின் தலைவர் கே. சிவன்.
அப்போது, பிரதமரின் திட்டம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு இஸ்ரோவின் வருங்காலத்திட்டங்கள் பற்றியும் ககன்யான் குறித்தும் இருவரும் விளக்கம் அளித்தனர்.
அடுத்த நாற்பது மாத திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்குப் பின்பு, இந்தியா மூன்று ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. 16 நிமிட பயணத்தில் அவர்கள் விண்ணிற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் 5-7 நாட்கள் வரை லோ ஆர்பிட்டில் தங்கி பின்பு பூமிக்குத் திரும்புவார்கள் என்று கூறினார்.
விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மாவுடன் இன்னும் தொடர்பில் இஸ்ரோ, அவருடைய அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டுக் கொண்டு அதன்படி செயல்பட்டு வருவதாக கூறிவருகிறார்.
ஆளில்லாத ககன்யான் திட்டத்தினை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்பு தான் மனிதர்களை அங்கு அனுப்பத் திட்டமிட்டிருப்பதாக கூறினார் சிவன்.
இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உருவாக்கப்படும் இந்த விண் ஓடத்திட்டத்திற்கான செலவு 10,000 கோடி ரூபாய்க்கும் குறைவு என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 2018 தொடங்கி, மார்ச் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 19 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த உள்ளது இஸ்ரோ. சந்திரயான் 2னை வருகின்ற ஜனவரி மாதம் விண்ணில் செலுத்த உள்ளது இஸ்ரோ.