செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பள்ளங்களுக்கு மறைந்த புகழ்பெற்ற காஸ்மிக் கதிர் இயற்பியலாளர் (Cosmic ray physicist) தேவேந்திர லால் மற்றும் வட இந்தியாவில் உள்ள முர்சன் மற்றும் ஹில்சா நகரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று பள்ளங்களும் ரெட் பிளானட்டின் தர்சிஸ் எரிமலைப் பகுதியில் அமைந்துள்ளன என்று இந்திய அரசின் விண்வெளித் துறையின் ஒரு பிரிவான அகமதாபாத்தைச் சேர்ந்த பி.ஆர்.எல் புதன்கிழமை தெரிவித்தது.
2021-ம் ஆண்டில் இங்குள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (பிஆர்எல்) பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய விஞ்ஞானிகள் குழுவால் இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டது, இந்த மாத தொடக்கத்தில் ஒரு சர்வதேச அமைப்பால் பெயரிடப்பட்டது.
தார்சிஸ் என்பது செவ்வாய் கிரகத்தின் மேற்கு அரைக்கோளத்தில் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பரந்த எரிமலை plateau ஆகும். இப்பகுதி சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலைகளின் தாயகமாகும்.
பிஆர்எல்-ன் பரிந்துரையின் பேரில், கிரக அமைப்பு பெயரிடலுக்கான சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) ஜூன் 5-ம் தேதி பள்ளங்களுக்கு "லால்" பள்ளம், "முர்சன்" பள்ளம் மற்றும் "ஹில்சா" பள்ளம் என்று பெயரிட ஒப்புதல் அளித்தது.
முர்சன் மற்றும் ஹில்சா ஆகியவை முறையே உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் அமைந்துள்ள நகரங்களின் பெயர்கள் ஆகும்.
பள்ளங்களின் கண்டுபிடிப்பு, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட லால் பள்ளத்தில் அதிக அளவு வண்டல் படிவுகளை நகர்த்தியது என்பதற்கான நிரூபணமான ஆதாரத்தை அளித்தது, மேலும் செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் ஈரமாக இருந்தது மற்றும் அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருந்துள்ளது என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தியது.
லால் பள்ளம் (Lal Crater)
-20.98°, 209.34° -ஐ மையமாகக் கொண்ட 65 கிமீ அகலமுள்ள பள்ளம், 1972 முதல் 1983 வரை பி.ஆர்.எல் நிறுவனத்தை வழிநடத்திய புகழ்பெற்ற இந்திய புவி இயற்பியலாளர் தேவேந்திர லா-ஐ பெருமைப்படுத்தும் விதமாக "லால் க்ரேட்டர்" என்று பெயரிடப்பட்டது.
பேராசிரியர் தேவேந்திர லால், காஸ்மிக் கதிர் இயற்பியலாளர் மற்றும் பூமி மற்றும் கிரக விஞ்ஞானி ஆவார், அவருடைய ஆராய்ச்சி ஆர்வங்களின் பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றலுக்கு பெயர் பெற்றவர்.
முர்சன் பள்ளம் (Mursan Crater)
லால் பள்ளத்தின் கிழக்கு விளிம்பில் 10 கிமீ அகலமுள்ள சிறிய பள்ளம், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயரால் "முர்சன் பள்ளம்" என்று பெயரிடப்பட்டது. PRL-ன் தற்போதைய இயக்குனரான டாக்டர் அனில் பரத்வாஜ், ஒரு புகழ்பெற்ற கிரக விஞ்ஞானி பிறந்த இடம் என்பதால் அவரை கொளரவப்படுத்தும் விதமாக முர்சன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஹில்சா பள்ளம் (Hilsa Crater)
ஹில்சா பள்ளம் மற்றொரு 10 கிமீ அகலமுள்ள பள்ளம், லால் பள்ளத்தின் மேற்கு விளிம்பில் ஒன்றுடன் ஒன்றாக உள்ளது. "ஹில்சா க்ரேட்டர்" என்று பெயரிடப்பட்டது, இது இந்தியாவின் பீகாரில் உள்ள ஒரு நகரத்தின் பெயராகும்.
செவ்வாய் கிரகத்தில் இந்த புதிய பள்ளங்களைக் கண்டுபிடித்த குழுவில் ஒருவராக இருந்த PRL விஞ்ஞானி டாக்டர் ராஜீவ் ரஞ்சன் பார்தியின் பிறந்த இடமாகும். அவரை கொளரவப்படுத்தும் விதமாக அவர் பிறந்த ஊரின் பெயரான ஹில்சா என்பதை பள்ளத்திற்கு பெயராக வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.