கூகிள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கடந்த பிப்ரவரி மாதம் டிக்டாக் ஆப் அதிக அளவில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. சென்சார் டவரின் தெரிவித்துள்ளபடி, டிக்டாக் ஆப்-பின் வருவாய் மற்றும் இன்ஸ்டால்களின் அடிப்படையில் பயன்பாட்டின் கடந்த பிப்ரவரீ மாதம் சிறந்த மாதமாகும். மேலும், அந்த அறிக்கை, இந்த ஆப், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று கூறுகிறது.
அந்த அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் 46.6 மில்லியனுக்கும் அதிகமான டிக்டாக் ஆப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசில் 9.7 மில்லியன், அமெரிக்கா 6.4 மில்லியன் எண்ணிக்கையில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துள்ளனர்.
பிப்ரவரி 2020 இல் சுமார் 93.2 மில்லியன் இன்ஸ்டால்களுட்ன் டிக்டாக்கின் பெரும்பாலான டவுன்லோட்களுக்கு கூகிள் பிளே ஸ்டோர் கணக்கு வைத்திருப்பதாகவும், அதேசமயம், ஆப் ஸ்டோரில் 19.7 மில்லியன் மட்டுமே டவுன்லோட் செய்யப்பட்டு இருந்தன என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
டிக்டாக் அதன் தொடக்கத்திலிருந்து பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் மொத்தம் 1.9 பில்லியன் இன்ஸ்டால்களை குவித்துள்ளது.
50.4 மில்லியன் டாலர் வருவாய் உடன் டிக்டாக் 2020 பிப்ரவரி மாதம் அதிக வருமானம் ஈட்டிய மாதமாக அமைந்துள்ளது. இவற்றில் பெரும்பாலும் சீனாவிலிருந்து வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் டிக்டாக் டவுன்லோட் அதிகம் இருந்தாலும் அதிக வருவாய் ஈட்டும் முதல் மூன்று நாடுகளில் கூட இடம் பெற முடியவில்லை. இது டிண்டர் மற்றும் யூடியூப்பின் பின்னால் உலகளவில் அதிக வசூல் செய்த மூன்றாவது விளையாட்டு அல்லாத ஆப் ஆகும்.
தற்செயலாக, கொரோனா வைரஸ் பரவலால் ஆப் பயன்பாடு இப்போது சரிவைக் காண்கிறது என்று சென்சார் டவர் கூறுகிறது. இது சீனாவின் பூட்டுதலுக்காக பல நகரங்களுக்குச் சென்றுள்ளது. சீனாவில் இருந்துதான் இந்த நிறுவனத்திற்கு முக்கிய வருவாய் வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”