TIK Tok News In Tamil: தனியுரிமை பிரச்சனைகள் காரணமாக TikTok இந்தியாவில் தடை செய்யப்பட்டு Google Play store மற்றும் Apple app store லிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள தடை செய்யப்பட்ட 58 சீனத்து ஆப்களும் பதிவிறக்கம் செய்வதற்கு இன்னும் கிடைக்கிறது. இந்த தடையை அமல்படுத்தப் எவ்வாறு திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை இந்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இவ்வாறு TikTok ஆப்பிற்கு இந்திய அரசு தடை விதிப்பது இதுவொன்றும் முதல் முறையல்ல. முன்பு இதுபோல தடை விதிக்கப்பட்ட போதும் மறுபடியும் விரைவாக ஆப் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த குறுகிய வீடியோ அப்ளிகேஷனுக்கு இந்தியாவில் 200 மில்லியன் பயனர்கள் உள்ளனர். சுயசார்பு இந்தியா பற்றி பிரதமர் மோடி அறிவித்தது முதலே பல இந்திய நிறுவனங்கள் TikTok க்கு போட்டியான ஆப்களை தயாரிக்க தொடங்கிவிட்டன. Play store மற்றும் App store ல் இப்போது பல இந்திய குறுகிய வீடியோ தளங்கள் கிடைக்கிறது. Bolo Indya, Mitron app மற்றும் Roposo ஆகியவை அவற்றில் சில. TikTok க்கு மாற்றாக பதிவிறக்கம் செய்ய கிடைக்ககூடிய இந்திய ஆப்களின் பட்டியல் இங்கே.
Bolo Indya (ஆண்ட்ராய்டில் கிடைக்கிறது)
தற்போது 100,000 க்கும் அதிகமான பயனர்களால் நாட்டில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த Bolo Indya ஆப் Google Play store ல் கிடைக்கிறது ஆனால் Apple App store ல் கிடைக்கவில்லை. சீனத்து ஆப்களை தடை செய்வதற்கு முன்பாகவே மிகவும் விரும்பப்பட்ட இந்திய குறுகிய வீடியோ ஆப்பான Bolo Indya ல் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 39 நிமிடங்களுக்கு மேல் செலவிடுகிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து Tiktok நட்சத்திரங்களையும் வேகமாக வளரும் இந்த Bolo Indya சமூகத்தில் ஒரு பகுதியாக நாங்கள் அழைக்கிறோம் என்று Bolo Indya ஆப்பின் நிறுவனர் Varun Saxena தெரிவித்துள்ளார்.
Mitron (ஆண்ட்ராய்டில் கிடைக்கிறது)
இந்த TikTok இந்திய போட்டியாளரைச் சுற்றி கடந்த சில மாதங்களாக நிறைய சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த ஆப் Play store ல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது பிறகு அதிலிருந்து நீக்கப்பட்டது பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டது. Mitron இப்போது நாட்டில் நன்றாக இயங்கி வருகிறது மேலும் ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் இந்த ஆப்பை ஏற்கனவே பதிவிறக்கம் செய்துள்ளனர். Mitron தற்போது Google Play store ல் கிடைக்கிறது.
Roposo (ஆண்ட்ராய்ட் மற்றும் iOS ல் கிடைக்கிறது)
Roposo இது மற்றொரு இந்திய குறுகிய வீடியோ தளம் மேலும் இது குறுகிய காலத்தில் அதிகம் பயனர்களை பெற்றுள்ளது. Google Play Store ல் முதலிடத்தில் உள்ள சிறந்த வீடியோ ஆப்பாக திகழும் இந்த ஆப்பை 65 மில்லியன் இந்திய பயனர்கள் பயனபடுத்தி வருகின்றனர். தற்போது இந்த ஆப் Google Play store மற்றும் Apple App store ல் கிடைக்கிறது. Play store ல் இந்த ஆப்பை 50,000,000+ பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
Zee5, TikTok க்கு போட்டியான ஒரு ஆப்பை உருவாக்கி வருகிறது
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு TikTok க்கான ஒரு போட்டியாளரை Zee5 வரும் ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தும் என உறுதிப்படுத்தியுள்ளது. இது போன்ற ஒரு ஆப்பை அறிமுகப்படுத்துவதற்காக சில காலமாக நிறுவனம் வேலை செய்து வந்ததது, இது அடுத்த மாதம் அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது. இது தொடர்பான மேலும் விவரங்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.
Chingari (ஆண்ட்ராய்டில்)
Chingari ஆப்பை 1,000,000+ அதிகமானோர் Google Play store ல் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர். பிரதமர் மோடி சுயசார்பு குறித்து பேசிய பிறகு இந்த ஆப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. Tik Tok ஆப்புக்கு தடை விதித்து மத்திய அரசு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவு ஒரு நல்ல நடவடிக்கை. பல காலமாக Tik Tok, பயனர்களை உளவு பார்த்து தகவல்களை சீனாவுக்கு அனுப்பி வந்தது. இறுதியாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம் என Chinagri Appன் Co-Founder மற்றும் Chief Product Officer Sumit Ghosh தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ள இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த Chingari ஆப் 100% இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆப் என அவர் மேலும் தெரிவித்தார்.
ShareChat (ஆண்ட்ராய்ட் மற்றும் iOS ல் கிடைக்கிறது)
ShareChat மற்றொரு தேர்வு, இது ஒரு பன்மொழி சமூக வலைப்பின்னல் (multilingual social network). இந்த ஆப்புக்கு தற்போது 60 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் உள்ளனர். இது Google Play store மற்றும் Apple App store ல் கிடைக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.