என்ன தான் தடை செய்தாலும் டிக்-டாக் தான் முதலிடம்... இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட செயலிகள்!

இந்தியாவில் சில காலங்களுக்கு இந்த செயலி பயன்பாடு தடை செய்யப்பட்டிருந்தது. இந்தியா மட்டுமல்லாமல் துருக்கியிலும் சில சருக்கல்களை சந்தித்தது.

TikTok, Likee, WhatsApp apps created buzz 2019 : இந்த வருடம் மிகவும் முக்கியமான பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் சமூக வலைதளங்களில் ஏற்பட்டுள்ளது. முகநூல் தங்களின் சிறப்பை இழக்க துவங்கிய வருடம் இது என்ரு கூறலாம். டிக்டாக், லைக்கீ போன்ற செயலிகள் இந்தியா போன்ற பெரிய மார்க்கெட்டுகளில் இன்ஸ்டாகிராமைவிட செக்கப்போடு கொண்டிருக்கிறது என்றும் கூறலாம். வாட்ஸ்ஆப் நிறுவனம் பேகசஸால் பெரிய சர்ச்சைகளை எதிர் கொண்டது. ஃபேஸ்ஆப் மூலம் வயதான தோற்றத்தை பெரும் செயல்பாடுகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்த சமூக வலைதள செயலிகள் ஆகும்.

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

TikTok

2019ம் ஆண்டு மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ஒரு செயலியில் இதுவும் ஒன்று. இதனுடைய பாப்புலாரிட்டி இப்போதைக்கு எளிதில் மறைந்துவிடுவது போல் இல்லை என்று தான் கூறவேண்டும். கடந்த 10 வருடங்களில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட 7வது செயலி இதுவாகும். இந்த செயலியை வாங்க ஃபேஸ்புக் முயற்சி செய்தது. இருப்பினும் அந்த திட்டம் தோல்வியை தழுவியது. மார்க் ஸூக்கர்பர்க்கிற்கு சீக்ரெட் அக்கௌண்ட் இருக்கிறது என பஸ்ஃபீட் நியூஸே வெளியிட்டது. இந்தியாவில் சில காலங்களுக்கு இந்த செயலி பயன்பாடு தடை செய்யப்பட்டிருந்தது. இந்தியா மட்டுமல்லாமல் துருக்கியிலும் சில சருக்கல்களை சந்தித்தது.

FaceApp

ஜூலை 2019ம் ஆண்டு மிகப்பெரிய வைரல் ஹிட் அடித்த சமூக வலைதள செயலிகளில் ஒன்று இந்த ஃபேஸ்ஆப் ஆகும். தங்களின் புகைப்படங்களை இன்புட்டாக கொடுத்து ஓல்ட் ஏஜ் ஃபில்டர் பயன்படுத்தி வயதான புகைப்படங்களாக மாற்றி ஷேர் செய்தனர் நெட்டிசன்கள். இந்த ஆப் 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது இந்த ஆப் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த செயலியின் டெர்ம்ஸ் அண்ட் செர்வீஸ்களில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த ஆப்பினை பயன்படுத்தி மொத்தமாக வாடிக்கையாளர்களின் அனைத்து சொந்த தரவுகளையும் திருட முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

Likee

உலக அளவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலி இது. வீடியோ கேம் இல்லாத செயலி இது என்பது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டின் ப்ரேக்-அவுட் செயலி இந்த செயலி என்று ஆப் ஆன்னி அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் பிகோ டெக்னாலஜி வெளியிட்ட இந்த செயலியை கூகுள் பிளேயில் இருந்து 100 மில்லியன் முறை டவுன்லோட் செய்துள்ளனர். டிக்டாக் போன்றே சிறிய சிறிய வீடியோக்களை உருவாக்கி ஷேர் செய்ய இது பயன்படுகிறது.

Ablo

இந்த ஆண்டின் சிறந்த செயலிகள் என்று கூகுள் ப்ளேயால் தேர்வு செய்யப்பட்ட செயலிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த செயலிக்கு ப்ளே பெஸ்ட் (Play Best of 2019) என்ற விருது வழங்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை சாட் மூலம் இணைக்கும் செயலி இது. இதன் மூலம் ட்ரான்ஸ்லேட்டட் வீடியோ கால்கள் மற்றும் சாட்கள் பயன்படுத்திக் கொள்ள இயலும். மொழி தடையால் இனி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இயலாத நிலை ஏற்படாது.

Video Editor – Glitch Video Effects

வீடியோ எடிட்டர் – க்ளிட்ஸ் வீடியோ எஃபெக்ட்ஸ் இந்த வருட்டத்தின் கூகுள் யூசர்களின் சாய்ஸ் 2019-ஆக இருந்தது.

Facebook

இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட செயலிகளில் ஒன்று ஃபேஸ்புக். முதலில் தனிநபர்கள் சுதந்திரம் மற்றும் தனித்தகவல்கள் திருடு போனது குறித்தும், இரண்டாவது போலியான உண்மைக்கு புறம்பான செய்திகள் பரவுவது குறித்தும் அந்த தான் அதிகம் பேசப்பட்டது. ஆனாலும் இந்த 10 வருடங்களில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளில் ஒன்றாக இருந்தது இந்த செயலி. இதுவரை சுமார் 2 பில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் இதனை டவுன்லோட் செய்துள்ளனர்.

இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close