டிக்டாக் செயலியில் இத்தனை பாதுகாப்பு அம்சங்களா? : யூஸ் பண்ணுங்க, ஜமாய்ங்க
Tiktok : வீடியோக்களுக்கு பலர் அருவெறுக்கத்தக்க கமெண்ட்களை அளிப்பதால், அது வேறுவிதமாக போய்விடுகிறது. இந்த வசதியை நாம் மேற்கொள்வதால், யார் யார் நமக்கு கமெண்ட் செய்ய முடியும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.
டிக்டாக் செயலி, பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டதாக இருந்தாலும், அது அருவருக்கத்தக்க ஆபாச செயல்களுக்காகவே அதிகம் பயன்படுத்தப்படுவதால், இந்தியாவில் அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுமட்டுமல்லாது, செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் திருடப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, இந்தியாவில் டிக்டாக் செயலியை பலர் அன்இன்ஸ்டால் செய்ய துவங்கியுள்ளனர்.
Advertisment
சீன தயாரிப்பான டிக்டாக் செயலியை, இந்தியர்கள் பலரும் வெறுக்கத்துவங்கி, இந்திய தயாரிப்புகளான மித்ரோன், ரோபோஸோ உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
டிக்டாக் செயலியில், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில், டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
வெறும் வீடியோ பகிர்வு செயலியாகவே டிக்டாக் பார்க்கப்பட்டு வரும்நிலையில், அதில் நமக்கு தெரியாத பல முக்கிய அம்சங்கள் உள்ளன. அவை என்ன என்று ஒவ்வொன்றாக தெரிந்துகொள்வோம்
வயது வரம்பு : 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே, டிக்டாக் செயலியில் அக்கவுண்டை உருவாக்க முடியும். இதன்மூலம், 13 வயதுக்குட்பட்டவர்கள், டிக்டாக் பயன்படுத்த முடியாது.
பயன்பாட்டு காலம் : டிக்டாக் செயலியில் நாம் அதிகநேரம் செலவிடுகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டதா?. அவர்களுக்காகவே இந்த வசதி. நாம் டிக்டாக் செயலியை, ஒரு பாஸ்வேர்டின் மூலம், 30 நிமிடங்கள், 1 மணிநேரம், 2 மணிநேரம் என்று பயன்படுத்துமாறு செட் செய்துகொள்ளலாம். இந்த நேரம் நிறைவடைந்தவுடன் உடனடியாக செயலி ஆப் ஆகிவிடும். மேலும் தொடர வேண்டுமெனில், பாஸ்வேர்டை அளிப்பதன் மூலமே தொடரமுடியும்.
குழந்தைகள் பயன்படுத்த தடை : குழந்தைகள் உள்ளிட்ட 18 வயதிற்குட்டபட்டவர்கள் பயன்படுத்த முடியாதவாறு நாம் செட்டிங்சை மாற்றியமைத்து கொள்ள முடியும். அதேபோல், 30 நாட்கள் செல்லத்தக்க பாஸ்வேர்ட் பாதுகாப்பு வசதியையும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லா வீடியோக்களையும் பார்க்க வேண்டுமென்றால், அந்த பாஸ்வேர்டை நாம் அறிந்திருப்பது அவசியம்.
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு : தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவது, அவர்கள் மற்றவர்களை எளிதில் தொடர்புகொள்ள வசதி ஏற்படுத்தித்தருவது உள்ளிட்ட அம்சங்கள்
ஆபத்து எச்சரிக்கை குறிச்சொல் : வீடியோவில் ஏதேனும் வன்முறை, ஆபாசம் குறித்து இருந்தால், அதை மற்றவர்கள் காணும்முன்னர் அவர்களுக்கு அறிவுறுத்துதல்
கமெண்ட் பில்டர் : வீடியோக்களுக்கு பலர் அருவெறுக்கத்தக்க கமெண்ட்களை அளிப்பதால், அது வேறுவிதமாக போய்விடுகிறது. இந்த வசதியை நாம் மேற்கொள்வதால், யார் யார் நமக்கு கமெண்ட் செய்ய முடியும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.
பெற்றோர்கள் மூலம் கண்காணிப்பு : வீட்டில் மகனோ அல்லது மகளோ டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்தால், அவர்களது பயன்பாட்டை, பெற்றோர் கண்காணிப்பது மட்டுமல்லாது, அவர்களின் தொடர்புகள் உள்ளிட்டவைகளையும் கண்காணித்து மாற்றியமைக்க முடியும்.
பயன்பாட்டு அறிக்கையிடல் : வீடியோவில் ஏதாவது ஆட்சேபகரமாக தகவல்களோ அல்லது காட்சிகளோ இருப்பின் முன்கூட்டியே பயனர்களுக்கு அது தெரியப்படுத்தும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Follow Us

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - 8 TikTok features we bet you didn’t know
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.