Advertisment

TikTok: டிக்டோக் பயனர்களே உங்கள் போன் ஏற்கனவே ஹேக் ஆகியிருக்கலாம்

TikTok Major Security Flaw: பிரபல சமூக ஊடக செயலியான இந்த டிக்டோக்கை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்திகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tiktok, tiktok security

tiktok, tiktok security

TikTok's Privacy Issue: டிக்டோக் என்பது வீடியோ பகிர்வு சமூக வலைத் தளமாகும்.  இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த டிக்டோக் குறித்து தற்போது அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  சமீபத்திய அறிக்கைகளின்படி டிக்டோக் செயலியில் பாதுகாப்பு மீறல் நடந்தேறியுள்ளது.

Advertisment

இந்த புதிய பாதுகாப்பு மீறலின் மூலம் ஹேக்கர்கள் டிக்டோக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களையும் அவர்களின் கணக்கையும் கையாள்வதாக  செக் பாயிண்ட் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் லட்சக்கணக்கான பயனர்களின் டேட்டாக்களை சமரசம் செய்யும் அபாயம் இருப்பதாக  தெரியவந்துள்ளது.

அது மட்டுமில்லாமல்,பாதுகாப்பு குறைபாடு மூலம்  ஒரு  ஹேக்கர் மற்றொருவர் அக்கவுண்டின் மூலமாக டிக்டோக்கில் வீடியோக்களை பதிவேற்றவும், நீக்கவும் அனுமதிக்கிறது, மேலும் கணக்கு வைத்திருப்பவரின் மின்னஞ்சல் முகவரியை அணுகவும்  அவர்களுக்கு உதவுகிறது.

இந்த பாதுகாப்பு குறைபாடு 2019ம ஆண்டு நவம்பரில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. டிசம்பர் 15, 2019 க்குள் சரிசெய்யப்பட்டது. டிக்டோக் பயனர்கள் ஒருமுறை தங்கள் அக்கவுண்டை லாக்-அவுட் செய்து, கடவுச்சொற்களை மாற்ற மாற்றினால் இந்த பாதுகாப்பு குறைபாடுகளை தவிர்க்கலாம்.

இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், டிக்டோக்கின் பழைய வெர்ஷனை அப்ட்டே செய்தால் இந்த பாதுகாப்பு குறைப்பாட்டை முற்றிலுமாக தவிர்க்கப்படலாம்.

பிரபல சமூக ஊடக செயலியான இந்த டிக்டோக்கை  100 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்திகின்றனர். 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த செயலி கிடைக்கிறது. இந்தியாவில் அதிகபட்ச பயனர்களை டிக்டோக் கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயன்பாடு நாட்டில் ஆபாசத்தை ஊக்குவிப்பதாக மாநில நீதிமன்றம் கூறியதை அடுத்து, கடந்த ஆண்டு டிக்டோக் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இருப்பினும், தடை பின்னர் நீக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட காலகட்டத்தில் மட்டும் இந்த  நிறுவனம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட, தினசரி 500,000 அமெரிக்கா டாலரை இழப்பை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகின.

Tiktok
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment