கொரோனா காலத்தில் பலரும் வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணி செய்ய தொடங்கினோம். குழந்தைகளும் ஆன்லைன் முறையில் கல்வி கற்றார்கள். அப்போது லேப்டாப், கணினி, இன்டர்நெட், வைஃபை அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பலரும் வொர்க் ப்ரம் ஹோம் செய்து வருகின்றனர். அதோடு பலரது வீடுகளிலும் பல்வேறு பயன்பாடுகளுக்கு வைஃபை பயன்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில் முக்கியமான நேரங்களில் வைஃபை ஸ்லோ ஆகிவிடும். அது பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தும். இந்நிலையில் வைஃபை இணைய வேகத்தை அதிகரிக்க இங்கு சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வைஃபை இன்டர்நெட் ரவுட்டர் மூலம் வழங்கப்படும். அப்படி ரவுட்டர் வைக்கும் போது உங்கள் வீட்டில் மொபைல் இன்டர்நெட் நன்கு கிடைக்கும் பகுதியிலும், வீட்டின் மைய பகுதியிலும் அமைக்கலாம். அதோடு நீங்கள் பணி செய்யும் இடத்திற்கு அருகில் ரவுட்டர் வைத்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்டர்நெட் கவரேஜை அதிகரிக்க ரூட்டரை முடிந்தவரை உயரமாக வைப்பது நல்லது. அதை உயரமான அலமாரியில் வைக்க முயற்சிக்கவும் அல்லது சுவரில் பொருத்தலாம். இது உங்களுக்கு உதவலாம்.
மேலும், நம்மில் பலர் வைஃபை ரவுட்டரை ஆஃப் செய்வதே இல்லை. வைஃபை வேகத்தை அதிகரிக்க, அதை, 4-5 நாட்களுக்கு ஒரு முறை அதனை ஆன் மற்றும் ஆஃப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ரவுட்டர் கருவி அதை புதுப்பித்து இணைய வேகத்தை அதிகரிக்க கூடும். அடுத்ததாக, ரவுட்டருக்கு அருகில் எவ்வித சிக்னல் தடையும் இல்லாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இது சிக்னலை குறுக்கிட வாய்ப்புள்ளது. உதாரணமாக, மைக்ரோவேவ் ஓவன் 2.4GHz பேண்டில் வலுவான சிக்னலை வெளியிடுகின்றன. இது வைஃபை வேகத்தை பாதிக்கலாம். இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். ட்ரை செய்து பாருங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“