இந்தியாவில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஸ்மார்ட் போன்களும் ஹீட் ஆகிறது. இந்நிலையை சமாளிக்க சில சிம்பிள் டிப்ஸ் இங்கே பார்க்கலாம்.
1. நேரடி சூரிய ஒளியில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
இது சில நேரங்களில் தவிர்க்க முடியாதது, ஆனால் நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் உங்கள் ஃபோனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் அப்படி பயன்படுத்தும் போது விரைவாக வெப்பமடையும். உங்கள் வேலைக்காக உங்கள் மொபைலை வெயிலில் பயன்படுத்தினால், பிரகாசத்தை சிறிது குறைக்கவும் அல்லது நிழலில் பயன்படுத்தவும்.
2. சார்ஜ் செய்யும் போது போன் cover ரிமூவ் செய்யவும்
பெரும்பாலான நவீன ஸ்மார்ட்போன்கள் ஒரு மணி நேரத்திற்குள் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும், சில சில நிமிடங்களில் இதை அடைகின்றன. வேகமாக சார்ஜ் செய்வது வசதியானது என்றாலும், இது அதிக வெப்பத்தையும் உருவாக்குகிறது.
சார்ஜ் செய்யும் போது உங்கள் ஃபோன் சூடாக இருந்தால், வெப்பத்தைத் தணிக்கவும் வெப்பநிலையைக் குறைக்கவும் உதவ, பின் அட்டையை அகற்ற முயற்சிக்கவும்.
3. Hot environment-ல் கேம்களை விளையாட வேண்டாம்
நீண்ட நேரம் வீடியோ கேம்களை விளையாடும்போது, குறிப்பாக வெளியில் அல்லது சூடான அறைகளில் ஸ்மார்ட் போன்கள் கணிசமாக வெப்பமடையும். அதிக வெப்பமடைவதைத் தடுக்கவும், உங்கள் ஃபோனின் லைவ்-ஐ நீட்டிக்கவும், வீட்டிற்குள் அல்லது குளிரூட்டப்பட்ட அறைகளில் கேம்களை விளையாடுங்கள்.
4. ஸ்கிரின் brightness அட்ஜட் செய்யவும்
சில முதன்மை சாதனங்கள் 6,000 nits பிரகாசத்தை வழங்குவதால், புதிய ஃபோன்கள் நம்பமுடியாத அளவிற்கு அதிக பிரகாசத்தை அடையலாம். இருப்பினும், இந்த high பிரகாசம் உங்கள் தொலைபேசியின் வெப்பநிலையை விரைவாக உயர்த்தும்.
சில ஃபோன்கள் அதிக வெப்பமடைவதைத் தடுக்க டிஸ்ப்ளே பிரைட்னஸைத் தானாகவே சரிசெய்தாலும், உங்கள் ஃபோன் இன்னும் சூடாக இருந்தால், அதைக் குளிர்ச்சியாக வைத்திருக்க திரையின் வெளிச்சத்தை manually ஆக குறைக்கவும்.
5. official சர்ஜரை பயன்படுத்தவும்
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் உட்பட பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை ஒரே சார்ஜரைப் பயன்படுத்தி எளிதாக சார்ஜ் செய்யலாம். இருப்பினும், உங்கள் மொபைலுடன் வந்த சார்ஜரை விட வித்தியாசமான சார்ஜரைப் பயன்படுத்தினால் அது சூடாகலாம். இதைத் தடுக்க, சார்ஜ் செய்யும் போது உங்கள் மொபைலை கம்பெனி வழங்கும் சார்ஜரைப் பயன்படுத்தவும்.
6. மொபைலை பாக்கெட்டில் வைக்க வேண்டாம்
கோடையில் உங்கள் மொபைலை பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டில் குறைந்த காற்றோட்டம் இருப்பதால் எளிதாக வெப்படையும். அதனால் மொபைலை பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/techook/1-tips-to-keep-your-phone-cool-in-summer-9367185/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“