Advertisment

உங்கள் லேப்டாப் ஹேக் செய்யப்படாமல் பாதுகாப்பது எப்படி? இதோ சில வழிகள்!

லேப்டாப் பயன்படுத்துவது மற்றும் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உங்கள் லேப்டாப் ஹேக் செய்யப்படாமல் பாதுகாப்பது எப்படி? இதோ சில வழிகள்!

Tips To Protect Your Laptop From Hackers:அன்றாட வாழ்க்கையில் லேப்டாப், மொபைல் போன் அத்தியாவசிய பொருட்கள் ஆகிவிட்டன. கொரோனா காலத்தில் லேப்டாப் பயன்பாடு அதிகரித்தது.
வீட்டிலிருந்து வேலை செய்வதால் அதுவரை லேப்டாப் இல்லாதவர்கள் கூட வாங்கினார்கள். நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு வருகிறது. புது புது வளர்ச்சி, அப்டேட்கள் எனப் புதுமையாக இருக்கிறது.
அதேவேளையில் தொழில்நுட்பம் வளர்ச்சியில் நல்லவைகளும் இருக்கும், தீமைகளும் இருக்கும். நாம் கவனமாக கையாள வேண்டும். தகவல் திருட்டு, ஆன்லைன் கிரைம், ஹேக்கிங் அதிகமாகியுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசும் ஆன்லைன் குற்றம் தொடர்பாக பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

மூன்றாம் தரப்பு வலைதளங்கள், பாதுகாப்பு உறுதி செய்யப்படாத செயலிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆன்லைனில் வரும் குறுஞ்செய்திகளில் கவனமாக இருக்க வேண்டும். எப்படி லேப்டாப்பை பாதுகாப்பாக பயன்படுத்துவது என்று சில வழிகளை இங்கு பார்க்கலாம்.

இ-மெயிலில் தேவை கவனம்

வீட்டிலிருந்த படியே தினமும் ரூ.10ஆயிரம் சம்பாதிக்கலாம், அதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என வேலை வாய்ப்பு குறித்த மின்னஞ்சல் பலருக்கு வந்திருக்கும். உறுதிப்படுத்தப்படாத மின்னஞ்சல் செய்திகள் ஆபத்தானவை. இதன் மூலம் எளிதாக ஹேக்கிங் நடக்கிறது. பாதுகாப்பற்ற லிங்க்கை எப்போதும் பயன்படுத்த வேண்டாம். தெரியாத அல்லது சந்தேகத்திற்குரிய லிங்குகள் வந்தால் தவிர்த்து விட்டு, தகவலை டெலிட் செய்து விடுங்கள்.

கூகுள் பிரவுசர்

லேப்டாப்பில் கூகுள் பிரவுசர் பயன்படுத்தும்போது, தகவல்கள் பெற பல்வேறு இணையதளங்களை பயன்படுத்துவோம். அப்படி செய்யும்போது, நம்பகத்தன்மையற்ற இணையதளங்களை பயன்படுத்த கூடாது. இந்த தகவலை பெற இதை கிளிக் செய்யுங்கள் என்று லிங்க் வந்தால் தவிர்த்து விட்டு, வேறு தளத்தில் தேடுங்கள். நோட்டிபிகேஷன் வந்தாலும் கட்டாயம் அனுமதி கொடுக்கக்கூடாது. போலி இணையதளமாக இருந்தால், ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

லேப்டாப்பில் வங்கி தகவல்

பெரும்பாலானோர் தங்கள் லேப்டாப்பில் நெட்பேங்கிங் (Net Banking) வங்கிப் பணப்பரிமாற்றம் செய்வார்கள். இதற்காக அடிக்கடி வங்கிக் கணக்கிற்குள் செல்ல வேண்டியிருப்பதால், பாஸ்வேர்ட் உள்ளிட்ட லாகின் தகவல்களை சேமித்து வைத்திருப்பார்கள்.

இவ்வாறு வைத்திருக்கும்போது லேப்டாப்பை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம். மேலும், அதில் விளம்பரத்திற்காக லிங்க் ஏதும் வந்தால் கிளிக் செய்ய வேண்டாம். பணம் திருடப்படுவதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டாம். தனிப்பட்ட, ரகசியத் தகவல்களை வைத்திருந்தால் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. லேப்டாப் பாதுகாப்பு டிப்ஸ் குறித்த இந்த வழிகளை பின்பற்றி பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Technology Social Websites Social Network
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment