ரேஷன் கார்டுடன் உங்கள் செல்போன் எண்ணை அப்டேட் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காணலாம்.
ரேஷன் அட்டை என்பது அனைவருக்கும் தேவையான ஆவணமாகும். அரசின் பல நலத்திட்டங்களை பெற ரேஷன் அட்டை பெரிதும் உதவி செய்கிறது. இந்நிலையில், ரேஷக் கார்டுடன் செல்போன் எண்ணை இணைப்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
1967 என்ற உதவி எண்ணை அழைத்து கேட்டால், ரேஷன் கார்டுடின் செல்போன் எண்ணை மாற்றுவது தொடர்பான விவரங்களை தெரிவிப்பார்கள். அதனை நாம் பின்பற்றலாம்.
இதேபோல், அனைத்து தாலுகா அலுவலகத்திலும், தனியாக ரேஷன் கார்டு தொடர்பான உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்றும் செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளலாம். உதவி மையத்திற்கு செல்வதற்கு முன்பாக, குடும்ப அட்டையில் குறிப்பிட்டுள்ள குடுபத்தலைவர் தங்களது ஆதார் எண் மற்றும், குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதவி மைய அதிகாரியிடம், மொபைல் எண் மாற்றுவதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து புதிய எண்ணை மாற்றிக்கொள்ளலாம். அதன்பேரில், புதிய எண் மாற்றம் செய்த உடன், மாற்றப்பட்டதற்கான தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
ஆனால், ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை இணையம் வாயிலாகவோ அல்லது இ சேவை மையத்திலோ மாற்ற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“