தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நாளை (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகியவை எடுத்து சென்று வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டும். பூத் சிலிப்-ல் தங்களுக்கான வாக்குச் சாவடி மையம் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி பூத் சிலிப் கிடைக்கவில்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் போன்ற மற்ற அடையாள அட்டை எடுத்து சென்று வாக்களிக்கலாம். எனினும் நீங்கள் உங்கள் வாக்குச் சாவடி மையத்தை ஆன்லைனில் எளிதாக கண்டறியலாம்.
வாக்குச் சாவடி மையத்தை கண்டறிவது எப்படி?
1. electoralsearch.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் லாக்கின் செய்யவும்.
2. உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்.
3. Captcha-வை உள்ளிடவும்.
4. இதன் பின் உங்கள் வாக்குச் சாவடி மையம் காண்பிக்கப்படும். பூத் நிலை அலுவலர், தேர்தல் பதிவு அலுவலர்,
மாவட்ட தேர்தல் அதிகாரியின் பெயர் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் காண்பிக்கப்படும்.
5. அதோடு, பூத் நிலையத்தின் விவரம், அது எந்த மக்களவைத் தொகுதி மற்றும் சட்டமன்றத் தொகுதியை சார்ந்தது என்ற விவரங்களும் போர்ட்டலில் கொடுக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“