Advertisment

TN Govt Scheme: திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500: தமிழக அரசு திட்டம் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

TN Govt Rs 1500 Scheme: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆதரவற்ற திருநங்கைகளுக்கு உதவித் தொகை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Cbe Transgen.jpg

TN Govt Rs 1500 Monthly Scheme: தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம்  இப்போது தொடங்கப்பட்டு உள்ளது.

Advertisment

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுக்க 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். தகுதி வாய்ந்த திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகையாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

அதன் படி, உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள்  வெளியிடப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும். 

குடும்ப உறுப்பினர்களாலோ (அ) வேறு எந்த நபர்களாலோ உதவி பெறாத திருநங்கையராக இருத்தல் வேண்டும் உள்பட விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. உதவித் தொகை பெற தகுதி உடையவர்கள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலரை தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். தகுதி பெறுபவர்களுக் உதவித் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment