தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (TNDTE) சார்பில் நடத்தப்பட்ட டி.என்.டி.டி. தட்டச்சு தேர்வு 2024-க்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. dte.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 209,504 பேர் தேர்வுக்கு பதிவு செய்த நிலையில், 201,653 பேர் தேர்வு எழுதினர். இதில் 131,205 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 65.06% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆன்லைனில் எப்படி செக் செய்வது?
1. டி.என்.டி.டி.இ-ன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கம் dte.tn.gov.inக்கு செல்லவும்.
2. "TNDTE Typewriting Result 2024." என்ற ஆப்ஷனை கிள்க் செய்து லாக்கின் செய்யவும்.
3. இப்போது உங்கள் பதிவு எண், பெயர், பிறந்த தேதி உள்ளிடவும்.
4. இதன் பின் Show Result" or "View Marksheet" கொடுத்தால் தட்டச்சு தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும்.
5. அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“