TNEB - Aadhar Link Online Tamil News: தமிழகத்தில் அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் 100 இலவச யூனிட்கள் உட்பட மானியம் பெற மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் 6 தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், மானியத் திட்டங்களின் பலன்களைப் பெற விரும்பும் தகுதியுள்ள தனிநபர் ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது.
இதனையடுத்து, மின் நுகர்வோர்கள் அவசர அவசரமாக தங்கள் ஆதார் எண்ணை மின் நுகர்வு எண்ணுடன் இணைத்து வருகிறார்கள். இதற்காக, தமிழக மின்சார வாரிய துறை இணைய பக்கத்தை திறந்துள்ளது. ஆனால், மின் நுகர்வோர்கள் பலரும் ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை இணைக்க முயற்சிப்பதால் சர்வர் லோடு ஆகுவதில் அவ்வப்போது சிக்கல் ஏற்பட்டு வருவதாக மின் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆதார் எண்ணை மின் நுகர்வு எண்ணுடன் இணைக்க தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக, https://adhar.tnebltd.org/Aadhaar என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஆதார் எண்ணை மின் நுகர்வு எண்ணுடன் இணைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின்நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக bit.ly/linkyouraadhar என்ற புதிய இணையதளத்தை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த தளத்தில் ஆதார் அட்டை நகலைபதிவேற்ற வேண்டியது இல்லை. ஆதார் எண்ணை பதிவு செய்து, அது இணைக்கப்பட்டு இருக்கும் தொலைபேசிக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை உள்ளிட்ட வேண்டும். நீங்கள் உள்ளிடும் ஆதார் எண் - கையில் வைத்திருக்கும் தொலைபேசி எண்ணுடன் கண்டிப்பாக இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் எத்தனை முறை முயற்சித்தாலும் ஓடிபி (OTP) வராது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.