கருப்பு நிலவு என அழைக்கப்படும் அரிய வானியல் நிகழ்வு இன்று மாலை நிகழ உள்ளது. ஒரே மாதத்தில் 2 முறை அமாவாசை வருவது பிளாக் மூன் (Black Moon) என அழைக்கப்படுகிறது. 2024-ம் ஆண்டின் இறுதியில் நிகழும் அரிய நிகழ்வாகும். பிளாக் மூன் இந்தியாவில் டிசம்பர் 31, 2024 அன்று இந்திய நேரப்படி (IST) அதிகாலை 3:57 மணிக்கு நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குள் இரண்டு அமாவாசை கொண்ட இந்த அசாதாரண நிகழ்வு விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல், பிளாக் மூன் ஆகும். அமாவாசை என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வருவது.
இது அரிய நிகழ்வாக பார்க்கப்பட்டாலும் வழக்கமான அமாவாசைகளை போலவே இன்று நிலவு நம் கண்களுக்கு தென்படாது. ப்ளூ மூன் ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவுகளைக் குறிப்பிடுவது போல, கருப்பு நிலவு இரண்டு புதிய நிலவுகளைக் குறிக்கிறது.
கடைசியாக பிளாக் மூன் ஆகஸ்ட் 2022 இல் தென்பட்டது, அடுத்தது மே 2026 இல் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அமாவாசை போன்ற நிகழ்வு என்பதால் நீங்கள் எங்கிருந்தாலும், கருப்பு நிலவை பார்க்க முடியாது. நிலவின் வெளிச்சம் பூமி மீது விழுவதால் அதை நிழலாக இருக்கும். நம் கண்களுக்கு தெரியாது.